OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை தொடக்கம் வாகன காப்பீடு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது(OLA S1 Electric scooter battery new details)
ஓலா நிறுவனத்தின் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர்களுக்கான EMI மற்றும் வாகன காப்பீட்டு விவரங்கள் தற்போது அனைத்தும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சனை என்றால் அது கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டுமே, இந்தியா கிட்டதட்ட செலவு செய்யும் தொகையில் 80% கச்சா எண்ணெய்க்கு மட்டுமே செலவு செய்கிறது.
இதை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக பணி செய்து வருகிறது இதற்கு.
ஒரு பக்கம் பெட்ரோலியம் பொருட்களில் அதிக அளவில் எத்தனால் கலக்கப்படுகிறது மற்றொரு பக்கம் மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து அதனுடைய உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க பல முயற்சிகளை செய்கிறது.
இந்தியாவில் இது புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தயாரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில்.
அதன் விற்பனை அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதன் முதலாக இந்த ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது இந்தியாவில்.
இந்த ஓலா மின்சார வாகனங்கள் EMI மூலம் விற்பனை தூங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள், அந்த வகையில் ஓலா S1 ஸ்கூட்டர்கள் விற்பனை உலக எலெக்ட்ரிகல் வாகனம் தினத்தை முன்னிட்டு தூங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓலா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்த s1 எலக்ட்ரிகல் ஸ்கூட்டர் களுக்கான மாதாந்திர தவணையில் EMI (2,999)முதல் தொடங்கும் என அறிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்பாட்டு பாதிப்பான (OLA S1Pro) விற்பனை (3,999)தொடங்கும் என அறிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் HDFC வங்கி தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்கள்.
Tata Capital மற்றும் IDFC வங்கியும்,KYC டிஜிட்டல் செயலாக்கம் மூலம் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கடன்கள் வழங்க ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் OLA (S1) ரூபாய் (20,000) அல்லது S1pro ரூபாய் (25,000) முன்பணம் தொகை செலுத்த வேண்டும் மீதமுள்ள தொகை EMI மூலம் செலுத்தினால் போதும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா மற்றும் எலெக்ட்ரிக் செயலி மூலம் வாகனங்களுக்கு காப்பீடுகளை செய்து கொள்ளலாம்.
இந்த காப்பீடுகள் ஒரு ஆண்டுக்கு சொந்த சேதம் மற்றும் 5 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு சேதம் என்ற அடிப்படையில் OLA நிறுவனத்தால் அளிக்கப்படுகிறது.
Click here to view our YouTube channel
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விபத்து, பூஜ்ஜியம் தேய்மானம் மற்றும் சாலையோர உதவி போன்ற பிற துணை நிரல்களிலிருந்தும் காப்பீடுகளை விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளலாம்.
Corona 3rd wave in India symptoms in tamil
அதை தவிர பேட்டரிகளுக்கு மூன்று வருட உத்தரவாதம் தருகிறது மேலும் 40,000 கிலோமீட்டர் பயன்பாடு வரை காப்பீடு உத்தரவாதம் பேட்டரிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.