Omicron cases in india new reports 2022
2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் என்ன நடக்கப்போகிறது..!
இந்தியாவில் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில்.
கடந்த 24 மணி நேரத்தில் 20,775 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் புதிய வரலாற்றை ஏற்படுத்திவிட்டது.
அதற்கு அடுத்த ஆண்டில் 2வது அலைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு 3வது அலையை எதிர்க்கொள்ள தொடங்கி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் 3வது அலை உச்சமடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளன நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில்.
இந்தியாவில் இப்பொழுது பாதிப்பு கடந்த ஆண்டை விட முன்னதாகவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கிராமங்கள், குழந்தைகள் மீது, அதிக கவனம் தேவை என மத்திய சுகாதாரத்துறை அவசர அவசரமாக கடிதமொன்றை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி உள்ளது.
மத்திய அரசு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
ஓமிக்ரான் வழக்குகள் திடீரென்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் கிராமங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
ஹோட்டல் அறைகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றுங்கள், ICU படுக்கைகளை தயார் செய்யுங்கள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், போதுமான அளவில் கையிருப்பு இருக்கிறதா.
என்று சோதனை செய்து கொள்ளுங்கள், எல்லா மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளை போர்க்கால அடிப்படையில் கொண்டு வாருங்கள் வைரஸ் பாதிப்பு சோதனை செய்வதை உயர்த்த வேண்டும்.
ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் போதுமான அளவில் இருக்க வேண்டும், மக்களுக்கு போதுமான கட்டுப்பாட்டு ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்.
எளிதாக படுக்கை வசதிகளை புக் செய்யும் வசதி இருக்க வேண்டும் அதேபோல் மிக முக்கிய கிராமங்களிலும் குழந்தைகளின் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.
கிராமங்களில் கொரோனா வைரஸ் அதிகரிக்கிறதா என்று தினந்தோறும் சோதனைகளை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளது.
மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன
நிச்சயம் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வைரஸ் பாதிப்பு கடுமையாக ஏற்படும் என்பதால் மக்கள் மிகவும் கவனமுடன் விழிப்புடன் இருக்கவேண்டும்.
Shocking Continuing earthquake in Vellore 2021
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.