ஒரே நாடு ஒரே கல்வி வெடித்தது புதிய சர்ச்சை எச்சரிக்கும் கல்வியாளர்கள் எதிர்க்கும் சிபிஎஸ்சி தமிழகத்தில் நிலவரம் என்ன.One Nation one education system tn govt against

One Nation one education system tn govt against

மோடி அரசின் அடுத்த திட்டம் ஒரே நாடு ஒரே கல்வி வெடித்தது புதிய சர்ச்சை எச்சரிக்கும் கல்வியாளர்கள் எதிர்க்கும் சிபிஎஸ்சி தமிழகத்தில் நிலவரம் என்ன.

பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

திடீரென்று நம் நாட்டின் பெயர் மாற்றப்படுகிறது என்று செய்தி வரும் அதன் பிறகு அந்த சர்ச்சை அமைதியாகிவிடும்,திடீரென்று ஒரே ரேஷன் அட்டை ஒரே நாடு என்று அறிவிப்பு வரும்.

திடீரென்று ஒரே நாடு ஒரே வாகன உரிமம் என்ற அறிவிப்பு வரும், தற்போது திடீரென்று ஒரே நாடு ஒரே தேர்தல் வந்து பிறகு இப்போது ஒரே நாடு ஒரே கல்வி என்ற ஒரு திட்டம் வந்திருக்கிறது.

இந்த திட்டத்திற்கு சிபிஎஸ்சி போர்டு உச்சநீதிமன்றத்தில் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு ஒன்றிய அரசு பட்டியலில் உள்ள கல்வி உரிமையை மாநில அரசுக்கு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

அப்படியான ஒரு சூழ்நிலையில் ஒரே நாடு, ஒரே கல்வி, என்ற முயற்சி என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் நடக்க உள்ள சாதகம்பாதகம் என்ன என்று கல்வியாளர்களிடம் கருத்து கேட்டால்.

அவர்கள் சாதகமான அம்சத்தை விட பாதகமான அம்சம் அதிகம் என்று தெரிவிக்கிறார்கள்,ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே கல்வி பாடத்திட்டம் என்பது நடைமுறைக்கு உதவாத ஒரு திட்டம்.

அரசியல் என்பது வேறு, கல்வி என்பது வேறு, இந்த இரண்டையும் நாம் ஒன்றிணைக்கக்கூடாது நம் நாட்டில் பல்வேறு மொழிகள் இருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மொழிகள் பாடமாக பதிக்கப்பட்டு வருகிறது,ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான சிறப்பு தனித்துவம் இலக்கிய வளம் எல்லாம் இருக்கிறது.

ஆகவே ஒரே மொழியை பாடமாக வைப்போம் என்றால் மற்ற மொழிகளில் செல்வங்களை நாம் இழக்க நேரிடும் உதாரணமாக தமிழ் மொழிக்கும் அதிகமாக இலக்கிய செல்வங்கள் இருக்கின்றன.

அதேபோல மேற்குவங்க மொழிக்கு அதிக அளவுக்கு இலக்கிய வளம் உண்டு,இந்த இரண்டு மொழி அளவுக்கு இந்தி மொழிக்கு இலக்கிய வளம் கிடையாது.

அந்த மொழியை நாம் நாடு முழுவதும் கொண்டு செல்வதால் வேறு மாநில குழந்தை அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒன்றை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இரண்டு குழந்தையின் அறிவு வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் ஒரு குழந்தை அதற்கு அருகாமையில் உள்ள சூழல் என்று எதைக் கண்டு உணர்கிறதோ அந்த மொழியைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதுதான் அறிவியல் பூர்வமான அணுகுமுறை ஒரு குழந்தை அந்த பகுதியில் உள்ள விவசாயங்களை,முறையாக கற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தை எங்கு வளர்கிறது அந்த மாநிலத்தை பற்றியும் அதன் சூழலை பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு அக்குழந்தைக்கு சற்றும் சம்பந்தமில்லாத பீகார் ஜார்க்கண்ட் பற்றி படித்து என்ன செய்யப் போகிறது என்று கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அவர்களின் எதிர்காலத்திலும் நம் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் தமிழர்களின் கருத்து என தெரிவிக்கப்படுகிறது.

கல்வியாளர்கள் ஒரே நாடு ஒரே கல்வி என்ற ஒன்றிய அரசின் திட்டம் கண்டிப்பாக ஏற்கத்தக்கது இல்லை இந்த திட்டத்தை சிபிஎஸ்சி போர்ட் கூட எதிர்க்கிறார்கள்.

நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி இல்லை, சுற்றுச்சூழல், அரசியல் நிலப்பகுதி, கலாச்சாரம், என அனைத்தும் வித்தியாசப்படுகிறது.

மாணவர்களின் புரிந்து கொள்ளும் சக்தி கூட வேறுபடுகிறது,வறுமை கூட மாநிலத்திற்கு மாநிலம் வேறு மாதிரி இருக்கிறது.

இவ்வளவு ஏன் உயரக் கல்விக்கு செல்லும் மாணவர்களின் விகிதாசாரம் கூட ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது.

பல மாநிலங்களில் வறுமை காரணமாக உயிர் கல்விக்கு போகும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Types of business loan in India 2023

How to change signature and photo in pan card

இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த 7 உணவுகள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவுகள்

Leave a Comment