Paarai meen 10 amazing health benefits list
வாரத்தில் ஒரு நாள் இந்த மீனை நீங்கள் சாப்பிட்டால் நோய்கள் எல்லாம் தள்ளி நிற்கும்..!
நீங்கள் தினசரி சாப்பிடும் உணவானது சைவ உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை கட்டாயம் சாப்பிடலாம்.
அசைவ உணவு என்று வரும்போது நமக்கு அதிகமாக ஞாபகம் வருவது ஆடு, கோழி, போன்றவை தான். இவைகளை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
மீன் என்பது பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, கர்ப்பிணி பெண்கள், முதல் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிக சுவையான உணவாக இருக்கிறது.
அதிலும் ஆரோக்கியமான மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது மீன் என்று ஞாபகம் வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகம் வரும்.
எந்த மீனில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம்தான் அது.
சரும ஆரோக்கியம்
பாறை மீனில் அத்தியாவசியமான ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
எனவே அடிக்கடி பாறை மீனை உங்கள் உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது முற்றிலும் தடுக்கப்படும் சருமம் பொலிவோடு அழகாக தோற்றமளிக்கும்.
எலும்புகள் மற்றும் பற்கள்
பாறை மீனில் கால்சியம் ஊட்டச்சத்து வளமாக உள்ளது, இது பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகமாக அடங்கியுள்ளது.
கண் ஆரோக்கியம் அவசியம் தேவை
பாறை மீனில் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து அதிகமாக நிறைந்துள்ளது, எனவே இவற்றை வாரம் ஒருமுறை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கண் சார்ந்த பிரச்சினைகளை முற்றிலும் தவிர்த்து விடலாம்.
உடல் எடை குறைக்க
பாறை மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரதச் சத்து அதிகம் என்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு வழி வகை செய்கிறது.
நினைவாற்றல்
மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிசமாக இந்த உலகத்தில் இருக்கிறது.
தொடர்ந்து நீங்கள் மீன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளை உடலில் முற்றிலும் தவிர்த்து விடலாம்.
மூளை ஆரோக்கியத்திற்கு
மீன்களில் அதிகமாக நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு ஊட்டச் சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு, நல்ல பார்வைத் திறனுக்கும், உதவுகிறது.
கெட்ட கொழுப்புக்களையும் தடுக்கிறது
மீன் உண்ணும் பழக்கம் ரத்த உறைவை குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் உடலில் குறைக்கிறது.
மேலும் ரத்தக்குழாயின் நீட்சி தன்மை அதிகரிப்பதோடு, உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்துவிடுகிறது.
ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க செய்கிறது
மீன்களில் அடங்கியுள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், மற்றும் இரும்புச்சத்து, ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும் ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும்.
மாங்கனீசு, துத்தநாகம், மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துகள் நொதிகளின் வினையாக்கத்திற்கும் அயோடின் ஊட்டச்சத்து முன் கழுத்துக் கழலை நோய் வராமல் பாதுகாக்கவும் பெரிதளவு உடலை பாதுகாக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு
பெண் கர்ப்ப காலத்தில் மீன் உணவை சாப்பிட்டு வந்தால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம், தாய்ப்பாலை அதிகரிக்கவும் தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கூட மீன் உணவு பயன்படுகிறது.
தொப்பையை எளிதாக குறைக்க எவரும் சொல்லாத ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
ஆஸ்துமா நோய்
ஆஸ்துமா என்பது குழந்தைகளை தாக்கும் பிரச்சினைகளில் முக்கிய நோயாக இப்பொழுது இருக்கிறது, மீன் உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.
Top 10 plants provide pure oxygen in tamil
மன அழுத்தம் குறைய
மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் வயதானவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது, தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது சொறி சிரங்கு, மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை குறைத்துவிடுகிறது உடலில்.