Pakku mattai Plate business full details 2022
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு மாதவருமானம் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
சுய தொழில் தொடங்க வேண்டும் என பல நபர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் பல்வேறு தொழிலை தேர்வு செய்வார்கள் எந்த தொழில் சிறந்தது, எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
எந்த தொழில் எளிமையானது, எந்த தொழிலில் முதலீடு குறைவு, என பல்வேறு தகவல்களை அலசி ஆராய வேண்டும்.
பல்வேறு நபர்கள் இந்த தொழிலை பற்றி அதிகம் படித்திருப்பார்கள் இந்த தொழில் தொடங்கலாம் என சிந்தித்திருப்பார்கள்.
ஏனெனில் இந்த தொழில் பற்றிய தகவல்கள் அந்த அளவிற்கு இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
பாக்கு மட்டை பிளேட் தயாரிப்பு சிறந்து விளங்குகிறது, எப்பொழுதும் இருக்கிறது இதனை செய்து விற்பனையில் அதிக வருமானம் பெற முடியும்.
அதுமட்டுமின்றி இன்று தமிழக அரசு 2019 ஆம் ஆண்டுகளிலிருந்து, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று ஒரு சட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த தொழில் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்காதவை, என்பதால் சந்தையில் அதிகம் வரவேற்கப்படுகிறது.
தேவையான கட்டிட அமைப்பு
இந்தத் தொழில் தொடங்குவதற்கு 10க்கு 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய அறை போதும், ஆண் பெண் இருவரும் செய்யக்கூடிய தொழிலாக இது எளிமையாக இருக்கும்.
உற்பத்தி பொருட்கள் மிக எளிதில் நமக்கு கிடைக்கக்கூடியவை தான் அவை மூலப் பொருட்களான பாக்குமட்டை 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை தான் இருக்கும்.
இவற்றை மொத்தமாக வாங்கிக் கொண்டால் விலை குறைந்து கூட வாங்கிக் கொள்ளலாம்.
பொள்ளாச்சி, கோயம்புத்தூர், கேரளா, கர்நாடகம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் இந்த உற்பத்தி பொருட்கள் கிடைக்கும்.
இயந்திரங்கள் பொருத்தவரை பல வகைகள் இருக்கிறது அவற்றில் ஆட்டோமேட்டிக் மிஷின் தான் சிறந்து விளங்கும் எப்பொழுதும்.
இயந்திரத்தின் விலை இயந்திரத்தை பொருத்து மாறுபடும் உங்களுக்கு அதி நவீன இயந்திரம் வேண்டுமென்றால் நீங்கள் 5லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய வேண்டும்.
இயந்திரத்திற்கு மட்டும் அதுமட்டுமில்லாமல் இயந்திரங்கள் கிடைக்கக் கூடிய இடம் கோயம்புத்தூரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பாக்கு மட்டை தயாரிக்கும் முறை
பாக்குமட்டை தட்டு தயாரிப்பது அவ்வளவு கஷ்டமான வேலை இல்லை மிக எளிதாக செய்து விடலாம் முதலில் பாக்கு மட்டையை 30 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
30 நிமிடம் கழித்து பிறகு வெயிலில் சிறிது நேரம் வரை காய வைத்து எடுத்து விட்டோம் என்றால் பாக்குமட்டை தட்டு செய்வதற்கு தயாராகிவிடும்.
பாக்குமட்டை எடுத்துக்கொள்ளவும் இயந்திரத்தில் வைத்து வைத்து ஒரு பிரஸ் செய்தால் போதும் பாக்குமட்டை நீங்கள் செட் செய்த அளவிற்கு தயாராகிவிடும்.
குடிசைத்தொழில் ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிக்கும் முறை
உங்களுக்கு தேவையான அளவிற்கு தட்டின் அளவை மாற்றிக் கொள்ளலாம் அதாவது 4 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை அவை மாற்றி வைக்க முடியும்.
அதாவது சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை செய்து விற்பனை செய்ய முடியும்.
wife may not be interested in love making 2022
கோவில் திருவிழாக்களிலும், அனைத்து விசேஷ தினங்களிலும், திருமண மண்டபத்திலும், சிறு உணவகங்களிலும், இதனை விற்பனை செய்யலாம் அதிக அளவில்.