Panchagavya thayarikkum murai best tips 2023
சரியான முறையில் பஞ்சகவ்யம் தயாரிப்பது எப்படி..!
அதிகளவு செயற்கை ரசாயன உரங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் இயற்கை முறையில் இருக்கும் மண்ணின் வளம் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
ப்ளூ, பூச்சிகள், மண்புழு, போன்ற சிறிய உயிரினங்கள் முதல் பறவைகள் வரை அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
சிறு சிறு மூலிகை தாவரங்களும் பாதிக்கப்படுகிறது நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது, இப்படி பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் செயற்கை உரங்களை தவிர்ப்பது நன்று.
இதற்கு பதிலாக பஞ்சகாவியம் இயற்கை உரம் தயாரித்து நீங்கள் உங்களுடைய தோட்டம் அல்லது செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
எனவே மண்ணின் வளத்தை பாதுகாக்க தற்போது விவசாயிகள் அதிகமாக இயற்கை விவசாயத்தை விரும்புகிறார்கள்.
இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி பஞ்சகாவியம் குறிப்பாக பசுமாட்டின் 5 பொருட்களை வைத்து மிக குறைந்த செலவில் எளிதில் தயாரிக்க கூடிய ஒரு இயற்கை உரமாக இருக்கிறது.
Panchagavya thayarikkum murai best tips 2023 அனைத்து பயிர்களும் இந்த பஞ்சகாவியத்தை தெளிக்கலாம் குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும்.
பசுமாட்டின் 5 பொருட்களை பயன்படுத்தி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தினால் அதிக மகசூல் பெற முடியும் அதைப்பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
தேவையான இயற்கை மூலப்பொருட்கள்
நாட்டுப்பசு சாணம் புதியது – 5 கிலோ
பசு தயிர் – 2 லிட்டர்
பால் – 2 லிட்டர்
வாழைப்பழம் – 15 நன்றாக பழுத்தது
வெள்ளம் – 1 கிலோ
கோமியம் – 3 லிட்டர்
பசு நெய் – 1/2 கிலோ
இளநீர் – 3 லிட்டர்
பஞ்சகாவியம் தயாரிப்பது எப்படி
ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும் அவற்றில் அன்று ஈன்ற பசு சாணம் 5 கிலோ எடுத்து சேர்த்து, அதனுடன்பசு நெய் – 1/2 கிலோ சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வெள்ளைத் துணியால் பிசைந்து வைத்துள்ள பசு சாணத்தை ஒரு வாரம் வரை மூடி வைக்க வேண்டும் தினமும் இரண்டு வேளை கைகளால் பிசைந்து விட வேண்டும்.
Panchagavya thayarikkum murai best tips 2023 தினமும் இரண்டு வேலை பிசைய வேண்டும் என்றால் சாணத்தில் இருக்கும் மீத்தேன் வாய்வு வெளியேறுவதற்காக தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
ஒரு வாரத்திற்கு பிறகு பிசைந்து வைத்துள்ள சாண கலவையில் மேல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் நன்றாக சேர்க்க வேண்டும்.
பிசைந்து வைத்திருக்கும் மாட்டு சாணம் கலவையில் முதலில் 3 லிட்டர் இளநீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் பின்பு அதனுடன் 2 லிட்டர் கோமியம் சேர்க்க வேண்டும்.
பின்பு 2 லிட்டர் புளித்த தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இதை தொடர்ந்து 2 லிட்டர் பசும் பாலை சேர்க்க வேண்டும், பசும்பாலை நன்றாக சுடவைத்து கொண்டு பிறகு இந்த அளவில் சேர்த்தால் நன்று.
பின்பு இதனுடன் 15 கனிந்த வாழப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் வாழைப்பழத்தை எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் வாழைப்பழத்தில் அதிக அளவு நைட்ரஜன் உள்ளதால் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும்.
Panchagavya thayarikkum murai best tips 2023 இறுதியாக இவற்றில் ஒரு கிலோ வெள்ளத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் விலை உயர்ந்த நன்கு தரம் வாய்ந்த வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்.
அழுக்கு வெள்ளம் என்று எதுவும் பயன்படுத்த வேண்டாம் வெல்லம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் நுண்ணுயிரிகளை அதிகரிப்பதற்காக வெள்ளம் பயன்படுத்துகிறோம்.
இப்பொழுது பஞ்ச காவியம் தயார் இந்த கலவையை 15 நாட்கள் வரை தினமும் இரண்டு வேலை இடது புறமாக 50 முறை கலந்து விட வேண்டும் பின்பு வலது புறமாக 50 முறை கலந்து விட வேண்டும்.
15 நாட்கள் கழித்து இந்த கலவையை வடிகட்டினால் 20 லிட்டர் பஞ்சகாவியம் பெற முடியும்.
ஒரு ஏக்கருக்கு 30 மில்லி முதல் 35 மில்லி வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
பஞ்சகாவியம் பயன்கள் என்ன ?
75% பயிர் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Panchagavya thayarikkum murai best tips 2023 பயிர்கள் ஒரே சீராக வளர்வதற்கு உதவுகிறது, சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை வளர்ச்சி பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
13 வகையான நுண்ணுயூட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது
கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது,
மண்ணின் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பயன்படுகிறது.
இவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளாக பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் நிறைந்துள்ளது.