Paneer Apple 10 amazing health benefits
பன்னீர் ஆப்பிள் பயன்கள் என்ன..!
இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் கோடை காலத்தில் மிகவும் புத்துணர்ச்சி கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பன்னீர் ஆப்பிள் பயன்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பழம் ஆப்பிள் வகையைச் சார்ந்து இருப்பதால் இந்த பழத்தை ரோஜாப் ஆப்பிள் என்று சொல்கிறார்கள், என்று தான் நினைக்கிறீர்களா இல்லை இதனை பார்ப்பதற்கு மட்டும் ஆப்பிள் நிறத்தில் இருக்கும்.
இதன் சுவை ஆப்பிள் போல இருக்காது, அதற்கு நேர்மாறாக கொய்யாப்பழத்தை போல தான் இதன் சுவை இருக்கும்.
இந்த பழத்தை வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள், இந்த பழத்தை பார்க்கும் போது அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை தானாக தோன்றும் ஏனென்றால் அதன் நிறம் அழகாகவும் பார்ப்பதற்கு கண்ணாடி போல இருக்கும்.
இந்த பன்னீர் அப்பிளுக்கு, தண்ணீர் ஆப்பில் என்று மற்றொரு பெயர் உண்டு, இதற்கு இந்தியாவில் ஜாமுன் பழம் என்று சொல்லி அழைக்கிறார்கள்.
பன்னீர் ஆப்பிள் பயன்கள் என்ன
பொதுவாக எல்லாப் பழங்களிலும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் அளிக்கக்கூடிய பல பயன்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
அது போலதான் இந்த பன்னீர் ஆப்பிள் என்ற பெயர் கொண்ட ரோஜா ஆப்பிளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, குறிப்பாக மருத்துவத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த பன்னீர் ஆப்பிள் பழத்தில் வைட்டமின், சி, ஏ, நியாசின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, போன்ற ஏராளமான உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த ரோஜா ஆப்பிள் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
Paneer Apple 10 amazing பன்னீர் ஆப்பிள் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகிறது, பூக்களைத் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து குடித்து வர காய்ச்சல் சரியாகிவிடும்.
ரோஜா ஆப்பிள் பழத்தின் விதைகளை வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
பன்னீர் ஆப்பிளின் இலையில் கண்களில் வரும் கட்டிகள் மற்றும் வாத சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பன்னீர் ஆப்பிள் வேர் கால்-கை வலிப்பு பிரச்சினைக்கு தீர்வு தருகிறது.
இந்த பன்னீர் ஆப்பிளில் அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் குழந்தைகளுக்கு அதிகம் தரலாம் அவர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.