Parai 13 Health Benefits of Fish in tamil
வாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிட்டால் நோய்கள் எல்லாம் குணமாகும்.
நீங்கள் தினசரி சாப்பிடும் உணவு சைவ உணவுகளில் பல சத்துக்கள் அடங்கி உள்ளது என்றாலும் கூட நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது குறைந்தது அசைவ உணவை சாப்பிடலாம்.
அசைவ உணவு என்று வரும் போது அதிகமாக நினைவுக்கு வருவது கோழி, ஆடு, போன்றவற்றின் இறைச்சி மட்டுமே.
இதைவிட மீன் உணவையும் நீங்கள் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
மீன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சுவை மிகுந்த உணவுகள் இருக்கிறது.
அதிலும் ஆரோக்கியமான மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது,மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும்.
எந்த மீனில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது, எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றும்.
அறிவாற்றல் மேம்பட
மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாக இருக்கிறது, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது.
அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளை தவிர்க்க வழிவகை செய்கிறது, அதிலும் குறிப்பாக கடலில் ஆரோக்கியமாக வளர்ந்த மீன்கள் என்றால் தனி சிறப்பாக அமையும் ஊட்டச்சத்துகளுக்கு.
மூளை ஆரோக்கியத்திற்கு
மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 ஊட்டச்சத்து அமிலங்கள் குழந்தை மற்றும் பெரியவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது அதுமட்டுமில்லாமல் சரியாக சிந்திக்கவும் வழிவகை செய்கிறது.
கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது
மீன் சாப்பிடும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
இரத்தக் குழாயில் நீட்சி தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை மெல்ல மெல்ல குறைத்து கொழுப்பின் அளவையும் குறைத்து விடுகிறது.
புற்றுநோய் வாய்ப்பு குறைவு
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில்.
புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 35 முதல் 60 சதவீதம் வரையிலும் குறைக்கிறது, என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க
மீன்களில் அடங்கியுள்ள பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து, இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும்.
மாங்கனீசு, துத்தநாகம், மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவு உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு
பெண் கர்ப்பகாலத்தில் மீன் உணவை அதிகமாக எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம் தாய்ப்பாலை அதிகரிக்கவும்.
தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், மீன் உணவு அடிக்கடி தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது மருத்துவ வல்லுநர்களால்.
மன அழுத்தம் குறைய
இந்த மீன்களில் இருக்கும் சிறப்பு ஊட்டச்சத்து என்றால் அது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அதை எடுத்துக் கொள்ளும் போது வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொறி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை குறைப்பதற்கு வழி வகை செய்கிறது.
பாறை மீனின் நன்மைகள்
பாறை மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு வைட்டமின்கள், தாதுக்கள், அதிகம் நிறைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக 100 கிராம் பாறை மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும்,சாம்பல் சத்து 1.9,நீர்ச் சத்து 66.70 கிராமும் உள்ளது.
பாறை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்துவிடுகிறது.
தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமாவந்தால் முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து விடுகிறது.
வைட்டமின் டி ஊட்டச்சத்து
பாறை மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து நிறைந்துள்ளது, இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது, பாறை மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
நீரிழிவு நோய்க்கு
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாறை மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
பாறை மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.
பாறை மீனில் வைட்டமின் b12 உள்ளது இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
கால்சியம் மருந்துகள் தயாரிக்க
பாறை மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன்கழுத்துக்கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. பாறை மீன்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்கள் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும், என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உடல் எடை குறைய
பாறை மீனில் கலோரிகள் குறைவாகவும் மற்றும் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு அதிகமாகவே உதவிசெய்கிறது.
கண்கள் ஆரோக்கியத்திற்கு
பாறை மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளது, எனவே இவற்றை குறைந்தது வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வளர்சிதை மாற்றத்திற்கு
செல்லுலார் மற்றும் இணைப்புத் திசுக்களின் வளர்ச்சிக்கு இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்ய தேவையான அளவு புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இதய ஆரோக்கியத்திற்கு
பாறை மீனில் இருக்கும் ஒமேகா-3 ஊட்டச்சத்து இதயத் தமனிகளில் சேரும் கொழுப்பின் அளவை குறைக்கிறது, இதனால் இதயம் மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
அடிக்கடி கடல் சார்ந்த ஒமேகா-3 கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் குறைக்கப்படும்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.
சரியான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி
கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
செவிகளில் அதிக அளவு இரத்த சிவப்பு காணப்படும்.
மீனின் வயிற்றுப்பகுதியில் அதிகமான வீக்கம் இருக்காது
மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்
6 best foods recovery your body after corona
தசைப்பகுதி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
குறிப்பாக மீனில் கடல் பாசி மனம் வீசும்
பழைய மீன்களை கண்டுபிடிப்பது எப்படி
மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்
அழுகிய முட்டை மனம் அல்லது அம்மோனியம் மனம் அல்லது கழிவு பொருட்களில் வாடை வீசும்.
Click here to view our YouTube channel
மீனின் கண்கள் குழிவிழுந்து சுருங்கியும் காணப்படும்
செதிகள் வெளிரிய பழுப்பு நிறத்தில் மாறியிருக்கும்
Nethili meen health benefits 5 list in Tamil
மீனின் வயிற்றுப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து இருக்கும் வீக்கம் வெடிப்புகள் போல
மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்
தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும், சில நேரங்களில் கிழிந்து இருக்கும்