Pathira Pathivu new law best tips 2022
பத்திரப்பதிவு புதிய சட்டம் 2022
பத்திரப்பதிவு செய்வதற்கு பல்வேறு வகையான தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதனை நமது இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக மூத்த குடிமக்களுக்கு பத்திரப்பதிவில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென சார்பதிவாளர் அலுவலகத்தில் இப்பொழுது புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது, அதில் குறிப்பிட்டுள்ள செய்தி என்னவென்றால்.
70 வயதை கடந்த ஒரு நபர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எப்போது வந்தாலும், அவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென சுற்றறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பத்திரப்பதிவு துறை வேகமாக செயல்படுவதற்கும் மற்றும் பத்திரப்பதிவு வேகமாக செய்வதற்கு முன் பதிவு கட்டணமாக ரூபாய் 5000 செலுத்தினால் போதும்.
நீங்கள் அப்படி செய்தால் உங்களுக்கு மிக குறுகிய நாட்களில் பத்திரப்பதிவு செய்து செய்து தரப்படும் என பத்திரப்பதிவு செயலாளர் அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் வெளியிட்ட செய்தி என்ன
இனி வரும் காலங்களில் எந்த பத்திரப்பதிவு துறை சம்பந்தமான வழக்குகளாக இருந்தாலும் அது நேரடியாக நீதிமன்றத்தில் தான் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனென்றால் பத்திரப்பதிவு துறை சம்பந்தமான வழக்குகளை விரைவில் முடிக்கவும் இணையதளத்தில் ஏற்படும் காலதாமதத்தை சரிக்கட்டவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக பதிவு செய்யாத பாகப்பிரிவினை சொத்துக்களை சம்பந்தப்பட்டவர் பெறமுடியும் என்றும் நீதிமன்றம் ஒரு வழக்கில் 27.01.2022 தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
பத்திரப்பதிவு புதிய சட்டம்
Pathira Pathivu new law best tips 2022 அதில் நீதிபதி கூறியுள்ளது என்னவென்றால் ஏற்கனவே ஒரு வெள்ளை பேப்பரில் எழுதிய பாகப்பிரிவினை சொத்துக்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் அவர்களுக்கு உண்டான சொத்துக்கள் சேரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய பதிவு சட்டப்பிரிவு 17 உட்பிரிவின் படி பதிவு செய்ய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
பத்திர பதிவு சரிபார்த்தல் நடைமுறை
Pathira Pathivu new law best tips 2022 மூன்றாவது சனிக்கிழமைகளில் கூட சார்பதிவாளர் அலுவலகம் மார்ச் மாதம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் மார்ச் மாதம்தான் ஒவ்வொரு ஆண்டில் நிதியாண்டு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும் நேரத்தில் மொத்த வேலைகளையும் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற கட்டாயம் சனிக்கிழமைகளில் பதிவுத்துறை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு துறை சம்பந்தமான பல்வேறு வகையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்முடைய இணைய தளத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.