Patta Name Transfer Online new in tamil 2022

Patta Name Transfer Online new in tamil 2022

இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய பதிவில் இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிலத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பட்டா, சிட்டா, வில்லங்கம் சான்று, பத்திரப்பதிவு, என இவை அனைத்தும் வீட்டிலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் இதில் ஏதேனும் பிரச்சினை என்றால் அதற்கான தீர்வும் இணையதளம் மூலம் இயக்கப்படுகிறது.

Patta Name Transfer Online new in tamil 2022

முன்பெல்லாம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை இணைத்து.

அலைந்து திரிந்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்து பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 மாதங்கள் கூட ஆகிவிடும்.

ஆனால் இப்போது தமிழக அரசின் இணைய சேவை மூலம் நீங்கள் இணைய தளத்தை பயன்படுத்தி உங்களுக்கு தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும், உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Patta Name Transfer Online new in tamil 2022

இந்த வகையில் இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

3 வகையான விண்ணப்பங்கள் இருக்கிறது

Joint Patta Transfer

Subdivision Transfer

Patta Transfer

Joint Patta Transfer

Joint Patta Transfer என்பது இரண்டு மூன்று சர்வே நம்பரில் நிலம் வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வாங்கி இருந்தால் அது Joint Patta Transfer பதிவு பிரிவில் வந்துவிடும்.

Subdivision Transfer

Subdivision Transfer என்பது ஒருவர் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்றால் 1ஏக்கர் அவரிடமிருந்து அல்லது 2 ஏக்கர் நிலத்தை தங்கள் வாங்கி உள்ளீர்கள் என்றால் அது Subdivision Transfer இந்த பிரிவில் வந்துவிடும்.

Patta Transfer

Patta Transfer என்பது ஒரு சர்வே நம்பரில் நிலம் வைத்திருக்கும் நபரிடமிருந்து முழு நிலத்தையும் நீங்கள் வாங்கி உள்ளீர்கள் என்றால் அது Patta Transfer இந்த பதிவு பிரிவில் வரும்.

இந்த மூன்று வகை விண்ணப்பங்களில் தங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தாங்கள் செல்லான் கட்ட வேண்டியதாக இருக்கும்.

தேவைப்படும் ஆவணங்கள் என்ன

ஆதார் கார்டு

பத்திர நகல்

கம்ப்யூட்டர் சிட்டா

வில்லங்க சான்றிதழ்

Patta Transfer-யில் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான (Challan) போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும்.

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய கட்டண தொகையாக குறைந்தபட்சம் 60/- ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டண தொகையை நீங்கள் இணையதளம் மூலம் சமர்பிக்கலாம்.

Best new mehndi designs in tamil 2022

இணையதளம் மூலம் தங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் https://www.tn.gov.in/ இணையதள பயன்பாட்டின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள்.

Leave a Comment