Pen Memorial at the marina best tips 2023
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் திட்டத்தை பரிசீலனை செய்கிறது மத்திய அரசு இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்..!
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 134 அடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,இதற்கான அனுமதி குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இன்று பரிசீலனை மேற்கொள்கிறது.
மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.23 ஏக்கர் அளவில் கருணாநிதியின் நினைவிடம் தயாராகி வருகிறது.
Pen Memorial at the marina best tips 2023 இந்த நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை நினைக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைய இருக்கிறது.
அதேபோல் கருணாநிதி இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில், அவருடைய நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க இடம் பெற்றுள்ளது.
Pen Memorial at the marina best tips 2023 இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே மாவட்ட மாநில அளவில் முன்மொழிவு பெறப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டமும் நடத்தப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம், அனுமதிகோரி தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து இன்று மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குறித்து பரிசீலனை மேற்கொள்கிறது,இந்த பரிசீலனைக்கு பின்னர் மத்திய அரசின் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்.
தமிழக மக்களின் நிலைப்பாடு என்ன
Pen Memorial at the marina best tips 2023 இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்க்கட்சிகள், இடதுசாரி கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு படி மேலே சென்று இந்த நினைவிடச் சின்னம் அமைய விடமாட்டோம்.
எக்காரணம் கொண்டும் இதை தடுத்தே தீருவேன், நானே இதை நேரில் சென்று உடைப்பேன் என கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருப்பது என்பது உண்மைதான், ஏனென்றால் அனைத்து துறைகளிலும் விலைவாசி உயர்வு என்பது மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நினைவுச்சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொது நல வழக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு இன்று தனது முடிவை அறிவிக்கும்.