People at risk Black Fungal Infection 5Problem
இந்த 5 பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்(People at risk Black Fungal Infection 5Problem)
சமீப நாட்களில் இந்தியாவில் பூஞ்சைத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது இது நாம் எதிர்கொள்ளும் புதிய தொற்றுநோய் என்று பலரும் கருதுகிறார்கள் இப்பொழுது மியூகோர்மைகோசிஸ் அதாவது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றுகள் உண்மையில் புதிய நோய்கள் இல்லை.
மியூகோர்மைகோசிஸ் யாருக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
மியூகோர்மைகோசிஸ் இது அனைவரையும் பாதிக்காது ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிக கடுமையானதாகவும் ஒரு சில நேரங்களில் மரணத்தை கூட ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபர்கள் இப்பொழுது பூஞ்சை தொற்றுநோய்கள் உடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் சிக்கல்கள் மிகவும் எளிதில் ஆளாகி விடுவார்கள் ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமானதாக இல்லை குறிப்பாக சில நோய்கள் மற்றும் முன்பு இருக்கும் சிக்கல்கள் இதன் ஆபத்தை மேலும் அதிகரிக்கும்.
இது போல் இருக்கும் நபர்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தங்கள் வாழ்க்கையில்.
கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய்.
இந்த நபர்கள் இப்பொழுது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஏனெனில் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இப்பொழுது எந்த வகையான பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளது.
நீரிழிவு நோய் வீக்கத்தை அதிகமாக்குகிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது அதிக குளுகோஸ் அளவுகள் பூஞ்சைகளை உடலில் எளிதில் நுழையும் பரப்பவும் அல்லது செழிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது மற்றும் முக்கிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
நீரிழிவு நோயாளிகள் தோல் நோய்த் தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகிறார்கள் அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன இது பூஞ்சை உடலில் எளிதில் நுழைவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும்.
கூடுதலான கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகள் தீவிரத்தன்மை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் ஆபத்துகளை எதிர் கொள்ளக்கூடும் எனவே இரத்த குளுக்கோஸ் அளவை கண்காணிப்பது அவற்றை நன்கு பராமரிப்பது மிக முக்கியமாகும் இது போன்ற நேரங்களில்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் நிலைமைகள்.
உடலில் சில பிரச்சனைகளுக்காக தானாகவே கோளாறுகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பது மட்டுமில்லாமல் செயல்படுவதை தடுக்கலாம் அல்லது நோய்க் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்க தவறலாம்.
ஒரு நபர் காற்று அல்லது அசுத்தமான சூழ்நிலைகள் வழியாக அவற்றை சுவாசிக்கும் போது கருப்பு பூஞ்சை உடலில் பரவுகிறது மேலும் மோசமான செயல்பாடு நோய் எதிர்ப்பு அமைப்பு அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி பூஞ்சைகளை எதிர்த்துப் போராடுவதை தாமதமாகும்.
பிறகு முக்கிய உறுப்புகளை பாதிக்கும் மற்றும் குணப்படுத்துவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் இதனால் மோசமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள் அல்லது அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களை காப்பாற்ற இருமடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எச்ஐவி எய்ட்ஸ்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சிடிசி கூற்றின்படி எச்ஐவி எய்ட்ஸ் நோய் ஒருவரின் உடலில் எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தியைகட்டுப்படுத்தி வைக்கிறது என்று கூறுகிறது.
இது ஒரு நபரை அடிக்கடி நோய்வாய்படுத்தக் கூடியதாக மட்டுமில்லாமல் பூஞ்சைகளை உருவாக்குவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறது இதேபோன்று அபாயங்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கலாம் அல்லது நீண்ட காலமாக நோய் எதிர்ப்பு சக்திகளை அடக்கும் ஸ்டெராய்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரகக் கோளாறுகளும் இதில் அடங்கும்.
சிறுநீரக சேதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகப்பெரிய தீங்கு விளைவுகளை ஏற்படுத்தும் ஏனெனில் இது உங்கள் உடல் அமைப்பை பலவீனப்படுத்தக்கூடும் மேலும் கிருமிகள் மற்றும் நோய்க்கிருமிகள் நுழையும் மற்றும் அதன் விளைவாக சேதத்தை ஏற்படுத்தும்.
எங்கள் YOUTUBE பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.
சிறுநீரக சேதங்கள் சிறுநீரகங்கள் உற்பத்தி செய்யப்படும் உடலில் சில முக்கியமான நோயெதிர்ப்பு ஊட்டச்சத்துக்களின் செயல்பாட்டை குறைக்கலாம் இதனால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதே போன்ற அபாயங்கள் இருக்கலாம்.