BE /B.Tech முடித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் 2021 வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கலாம்.(PGCIL Field supervisor new recruitment 2021)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆனது Field Super visor மற்றும் Field Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்யுடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மொத்த காலிப்பணியிடங்கள் 97.
மேலும் சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், கல்வித்தகுதி, தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள் 2021.

இந்த மத்திய அரசு பணிக்கு 97 காலிப்பணியிடங்கள் உள்ளன இந்த பணியிடங்களுக்கு அதிகபட்சமாக 29 வயதிற்குள் இருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள். மேலும் வயதுவரம்பு தளர்வு பற்றி முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
PGCIL வேலைவாய்ப்பு கல்வித்தகுதி 2021.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் (B.E/B.Tech /B.SC (Engg) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் கல்லூரி பாடங்களில் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
PGCIL வேலைவாய்ப்பு தேர்வு கட்டணம் 2021.
Field engineer (Electrical/Civil) பணிக்கு ரூபாய் 400/-யும் Field supervisor (Electrical Civil) பணிக்கு ரூபாய் 300/-யும் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PGCIL வேலைவாய்ப்பு தேர்ந்தெடுக்கும் முறை 2021.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
PGCIL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை 2021.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி 9/05/2021 தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ள அனைத்து தகவல்களையும் நன்கு தெரிந்து கொள்வது நல்லது ஏனெனில் உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு இது வழிவகுக்கும்.
New Drug Has been introduced against covid-19
இது மத்திய அரசு பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களும் மற்றும் தேவையான அளவு புகைப்படங்களும் சரியான அளவில் இருக்க வேண்டும் விண்ணப்பிக்கும் முன்பு இதனை ஒரு முறைக்கு இரு முறை கவனமாக கையாளவேண்டும் விண்ணப்பதாரர்கள்.