Plus 2 exam result in Tamilnadu
Plus 2 exam result in Tamilnadu தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..!
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய 8.17 லட்சம் மாணவருக்கான தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடுகிறார்.
http://www.tnresults.nic.in/, http://tnresults.nic.in/, http://tnresults.nic.in/ மாணவர்கள் ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது.
தமிழக முழுவதும் 3,324 மையங்களில் இந்த தேர்வு நடந்தது சுமார் 8 லட்சத்தி 36,593 பள்ளி மாணவர்கள் 23,747 தனி தேர்வாளர்கள் 526 மாற்றுத்திறனாளிகள் 6 மூன்றாம் பாலினத்தவர் 90 சிறை கைதிகள், என மொத்தம் 8.65 லட்சத்து மாணவர்கள் தேர்வை எழுத பதிவு செய்திருந்தார்கள்.
Plus 2 exam result in Tamilnadu இதில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டார்கள் சுமார் 48 ஆயிரம் மேற்பட்டோர் தேர்வினை எழுதவில்லை.
பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடந்தது, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிந்து விட்டது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழக அரசு பல்வேறு வகையான இணையதளங்களையும் அறிவித்துள்ளது.
Plus 2 exam result in Tamilnadu அந்த இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி மற்றும் தேர்வு எண்களை உள்ளீடு செய்தால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Plus 2 exam result in Tamilnadu தேர்வு முடிவுகளை நம்மளுடைய இணையதளம் மூலமும் தெரிந்து கொள்ளலாம் தேர்வு முடிவுகளுக்கான இணையதள லிங்க் வழங்கப்பட்டுள்ளது மாணவர்கள் இதில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கடந்த பல ஆண்டுகளாக ப்ளஸ் டூ தேர்வில் மாணவிகள் மட்டுமே முதலிடத்தில் பிடித்து வருகிறார்கள், இந்த ஆண்டு எப்படி அமையப் போகிறது என்பதையும் பார்ப்போம், மேலும் மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்வு எழுதி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.