PM kisan 12th installment date useful tips
PM-Kisan 12 வது தவணை பணம் வரும் தேதி அறிவிப்பு..!
விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 2,000/- ரூபாய் நிதி உதவியின் 12வது தவணை தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த தொகையை பெற லட்சக்கணக்கான விவசாயிகள் இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு.
ஆண்டுதோறும் ரூ 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது, 4 மாதங்களுக்கு ஒரு தவணை என 2,000/- ரூபாய் என ஒரு ஆண்டில் மூன்று தவணைகள் வழங்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
யாருக்கு கிடைக்கும்
பயிரிடக்கூடிய விவசாய நிலங்களை தங்களது பெயரில் வைத்துள்ள விவசாய குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியற்றவர்கள் யார்
அதேநேரத்தில் நிறுவன விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள்.
வருமான வரி செலுத்துபவர்கள், அரசிலமைப்பு பதவிகளை வகிக்கும் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்.
பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000/- ரூபாய்க்கு அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.
12 வது தவணை எப்பொழுது கிடைக்கும்
PM kisan 12th installment date useful tips இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது 12வது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
அது குறித்த தகவல் கசிந்துள்ளது அதாவது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் 12வது தவணை பணம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்வது எப்படி இதற்கு
pm-kisan திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றார்கள் இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரி அணுகவேண்டும்.
பொது சேவை மையங்களில் இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம் pm-kisan இணையதளத்தில் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை
PM kisan 12th installment date useful tips இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்திய அரசின் குடியுரிமை சான்றிதழ்.
நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது பிரதமர் கிசான் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் (farmers corner) என்ற ஒரு பிரிவு உள்ளது இந்த பக்கத்தின் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.