PM Modi speaks with bjp leaders useful 2022
ஆளுநர் மாளிகையில் மோடி கேட்ட கேள்வி இரவோடு இரவாக நடந்த ரகசிய மீட்டிங் என்ன விவாதிக்கப்பட்டது..!
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நேற்று முடிந்தபின் கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வெடுக்க சென்றார் அப்போது பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
மிக பிரமாண்டமாக பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இருவரும் இணைந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீபத்தை செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார்கள்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் என் ஆர் ரவி, ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள், பல்வேறு பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
கூட்ட நெரிசல்
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா முடிந்ததும் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகைக்கு சென்றார் நேற்று அங்கு தான் பிரதமர் மோடி உறங்கி ஓய்வு எடுத்தார்.
ஆனால் ஓய்வு எடுக்கும் முன் பெரும் வேலைப்பளு நாளுக்கு இடையிலும் பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், நாகேந்திரன், பொன்ராதாகிருஷ்ணன், போன்றவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை செய்தார்.
அண்ணாமலை வெளியிட்ட முக்கிய செய்தி
இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பு என்று அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அறிக்கையை வெளியிட்டார்.
PM Modi speaks with bjp leaders useful 2022 தமிழக அரசியல் குறித்து பேசவில்லை புதிய நிர்வாகிகள் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்,மற்றபடி தமிழ்நாடு அரசியல் பற்றி இதில் பேச எதுவும் இல்லை.
அவரை தனியாக சந்திக்க பாஜக நிர்வாகிகளுக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது, வேறு எதுவும் நாங்கள் பேசவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
ஆனால் ஆலோசனை நடைபெற்றது
PM Modi speaks with bjp leaders useful 2022 ஆனால் நேற்று இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய அரசியல் விவாதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக செய்திகள் கசிகிறது.
அதன்படி தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டு இருக்கிறார்.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள், அவர்களை நன்றாக செயல்படும்படி பிரதமர் மோடி வாழ்த்தி இருக்கிறார்.
அதன்பின் அதிமுக உட்கட்சி விவரங்கள் குறித்து மோடி கேட்டதாக தெரிகிறது.
நிர்வாகிகளுக்கு மோடி சொன்ன முக்கிய செய்தி
PM Modi speaks with bjp leaders useful 2022 அதுமட்டுமில்லாமல் பாஜகவின் புதிய நிர்வாகிகள் தேர்தல் பணிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும், லோக்சபா தேர்தலுக்கு இப்போது இருந்தே தமிழகத்தில் சிறுசிறு பணிகளை தமிழகம் முழுவதிலும் இருந்து செய்ய தொடங்குங்கள்.
இந்த ஆலோசனையில் பாஜக-அதிமுக கூட்டணி பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி தொடர்வதே பாஜகவிற்கு நல்லது என்று சில மூத்த நிர்வாகிகள் பரிந்துரைத்ததாக செய்திகள் கசிந்துள்ளது.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
தமிழகத்தில் வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் பலம் என்ன என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக செயல்படுங்கள் என்று பிரதமர் மோடி செய்திகள் வெளியிட்டதாக தெரிகிறது.