PMAY Scheme full details in tamil 2022
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2022..! ரூ 2.6 லட்சம் மானியம் பெறுவது எப்படி?
நம் அனைவருக்கும் ஒரு லட்சியக் கனவு இருக்கும் அது பெரும்பாலும் சொந்த வீடு கட்டுவது ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது பல நபர்களுக்கு வெறும் கனவாகவே இருந்து விடுகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பொருளாதார காரணம் அதுமட்டுமில்லாமல் கட்டுமான பொருட்களின் விலை என்பது உச்சத்தில் இருக்கிறது.
இருந்தாலும் அனைவரும் சொந்த வீடு கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உங்களுக்குப் பெரிதும் உதவும்.
இது மத்திய அரசின் மிக சிறந்த திட்டம் என்று சொல்லலாம், இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் 2022க்குள் இந்திய முழுவதும் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும்.
என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுகிறது, சரி இந்த பதிவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?
இந்த திட்டத்தில் எப்படி பயன் பெறுவது, யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணைய முடியும், இந்த திட்டத்தில் எவ்வளவு மானியம் கிடைக்கும், போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும், இது ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் செயல்முறைக்கு வந்தது, இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் 2022க்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும்.
தரமான கான்கிரீட் வீடு வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது,இந்தத் திட்டம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு மானிய தொகை வழங்கப்படுகிறது.
அதாவது இந்தத் திட்டம் EWS/LIG/MIG-I & II என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அந்தப் பிரிவுகளுக்கான மானியம் தொகையினை வழங்குகின்றன.
இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா CLASS திட்டம் என்று அழைக்கப்படுகிறது, இந்த திட்டத்தில் ஆண்டு வருமானம் 18 லட்சம் ஈட்டுபவர்கள் பயன்பெறலாம்.
கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (Credit Linked Subsidy Scheme)
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான தகுதி குறைந்த வருவாய். குழு. பொருளாதார ரீதியான பலவீனமான பிரிவு.
EWS/LIG மக்களுக்கும் மற்றும் நடுத்தர வருவாய் MIG-I & II மக்களுக்கும் ஆகியவற்றிற்கும் வழங்கப்படுகிறது.
இந்த பிரிவில் இந்த திட்டத்தின்கீழ் வட்டி மானியம் ரூபாய் 2.67 லட்சம் வரை ஒரு வீட்டுக்கு அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் முதன்மையாக வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
ஏற்கனவே ஒரு வீட்டை சொந்தமாக கொண்டிருக்கும் நபர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு கான்கிரீட் வீடு வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மைகள் பெற தகுதி கிடையாது.
EWS/LIG/MIG பிரிவு மக்களுக்கு
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் வரை இருக்க வேண்டும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் ரூ 3 லட்சத்திலிருந்து 6 லட்சத்திற்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
இது (MIG – I) நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருக்கவேண்டும்.
(MIG – I I)ஆண்டுக்கான வருமானம் ரூபாய் 12 லட்சம் முதல் 18 லட்சத்திற்கும் இருக்க வேண்டும்.
LIG & EWS பிரிவு மக்களுக்கு ஆண்டு வருமானம்
இந்தப் பிரிவில் வரும் மக்களுக்கு மானிய தொகை 6.5% வழங்கப்படுகிறது, மேலும் இவர்களுக்கு மானியம் ரூபாய் 6 லட்சம் வரை கிடைக்கும்.
இந்த 6 லட்சத்திற்கு 6.5 சதவீதம் மானியம் என்றால் இவர்களுக்கு RS,2,67,280/- வரை மானியம் கொடுக்கப்படுகிறது, இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை மாதம் ரூபாய் RS,2500/-என்று 20 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும்.
அதேபோல் EWS பிரிவு மக்களுக்கு 30 சதுர அடி வரையும் LIG பிரிவு மக்களுக்கு 60 சதுர அடி வரையும் அவர்கள் தங்கள் வீட்டை கட்டி முடித்து கொள்ளலாம்.
MIG I பிரிவு மக்களுக்கு
இந்த வகைப் பிரிவும் மக்களுக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்க வேண்டும் இவர்களுக்கு மானிய தொகை 4.0 சதவீதம் வழங்கப்படுகிறது.
மேலும் இவர்களுக்கு கடன் 9 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது 9 லட்சத்திற்கு 4% என்றால் இவர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை RS 2,35,068/.
இந்தப் பிரிவு மக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,250/-என்று 20 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும், அதேபோல் 160 சதுர அடி வரை இவர்கள் வீட்டை கட்டிக் கொள்ளலாம்.
MIG I I பிரிவு மக்களுக்கு
இந்தப் பிரிவில் வரும் மக்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்களாக இருக்க வேண்டும்.
காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெற சில எளிமையான குறிப்புகள்..!
இவர்களுக்கு மானியத் தொகை 3 சதவீதம் வழங்கப்படுகிறது, மேலும் இவர்களுக்கு கடன் 12 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.
இந்த 12 லட்சத்து 3 சதவீதம் மானியம் என்றால் இவர்களுக்கு RS 2,30,156/- வரை மானியம் வழங்கப்படுகிறது.
Top 10 best small business ideas in tamil
இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 2,200/-ரூபாய் என்று 20 ஆண்டுகள் வரை செலுத்திக் கொள்ளலாம், அதே போல் அவர்கள் தங்களது வீட்டை 200 சதுர அடி வரை கட்டி முடித்து கொள்ளலாம்.
புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.