PMSBY scheme full details in tamil 2021
2015 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டங்கள்.
இந்த விபத்து இழப்பு காப்பீட்டு திட்டத்தில் 2018 ஜூலை வரை நாடு முழுவதிலும் இருந்து 13.74 கோடி நபர்கள் இணைந்துள்ளார்கள்.
இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரு ஆண்டுக்கு 12 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு இலவசமாக கிடைக்கும் என்பது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஒரு லைப் இன்சூரன்ஸ் திட்டமாக இருக்கிறது இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 18 வயது முதல் 70 வயதுக்குள் உள்ள இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
இந்த மருத்துவ பாலிசியை வாங்கியவர்கள் விபத்து காரணமாக உயிர் இழக்கும் பொழுது 2 லட்சம் ரூபாய் வரையிலும் உடலுறுப்புகள் இழப்பின்போது 1 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீட்டு தொகையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான தகுதி
இந்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயதுக்குள் இருக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
பிரீமியம் தொகை எவ்வளவு
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கும் நபர்களுக்கு ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே கட்டணம் வங்கிகள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
இந்த திட்டம் பற்றிய முழு விவரம்
இந்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டை வாங்கிய நபர்கள் விபத்து காரணமாக உயிரிழந்தால் 2 லட்ச ரூபாய் பணம் அவர்களுடைய குழந்தைகள் அல்லது மனைவி பெறமுடியும்.
இதுவே இரண்டு கை, கால், கண், உள்ளிட்டவை இழந்தாலும் 2 லட்ச ரூபாய் காப்பீடு தொகை கிடைக்கும், ஒருவேளை விபத்தின்போது ஒரு கண், கை, கால், போன்ற உடல் உறுப்புகளை இழந்தாலும் 1 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீட்டு கிடைத்துவிடும்.
இந்த திட்டத்திற்கு பணம் செலுத்துவது எப்படி
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டை வங்கி கணக்கு மூலம் மட்டுமே செலுத்த முடியும், எனவே ஒருமுறை பிரியத்தை செலுத்திய பிறகு ஒவ்வொரு ஆண்டும் வங்கி கணக்கில் இருந்து பணம் தானாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மே மாதம் 31 ம் தேதி வரை இந்த தொகையை வங்கிகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
ஒருவேளை நீங்கள் கூட்டு சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் இருவர் பெயரிலும் தனித்தனியாக இதற்கான கட்டணத்தை செலுத்தி இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கிக்கொள்ள முடியும்.
இதற்கான காலம்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் தேதி 12 ரூபாய் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு அடுத்த நாள் முதல் பாலிசி புதுப்பிக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கபடுவது எப்படி
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டினை வாங்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு வங்கிக் கணக்கில் கட்டாயம் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் உங்களுடைய வங்கியை அணுகி அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளித்துவிட்டால் போதும் அனைத்து பெரிய வங்கி நிறுவனங்களிலும், வங்கி கிளைகளிலும், இந்த சேவை வழங்கப்படுகிறது.
இடையில் வெளியேற முடியுமா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் மூலம் ஒரு வருடம் முடிந்த பிறகு தேவை இல்லை என்றால் வெளியேறலாம் ஒருவேளை மீண்டும் சேர வேண்டுமென்றால் பிரியமும் தொகையினை செலுத்தி இணைந்து கொள்ளலாம்.
காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறதா
காப்பீட்டு திட்டத்தை வாங்கியவர்களின் வயது 70 அல்லது வங்கிக் கணக்கை மூடினால் அல்லது வங்கி கணக்கில் பிரியத்தை புதுப்பிக்க தேவையான பணம் செலுத்தாத போது காப்பீட்டு தொகை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க முடியுமா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தை வாங்கிய நபர்கள் வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டத்தினையும் வாங்கலாம் அதில் எந்த ஒரு தடையும் இல்லை.
இயற்கை பேரழிவில் உயிரிழந்தால் பணம் கிடைக்குமா
வெள்ளம், பூகம்பம், தீ விபத்து, மின்சாரம் தாக்குவது, போன்ற இயற்கை பேரழிவுகளில் உயிர் இழக்க நேர்ந்தாலும் அல்லது உடல் ஊனம், ஏற்பட்டாலும் இதற்கு காப்பீட்டுத்தொகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
மருத்துவ செலவுகள் ஏற்கப்படுமா
இந்த திட்டத்தில் மருத்துவ செலவுகள் ஏற்கப்பட மாட்டாது அதற்கு நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் கூடுதலாக.
காப்பீட்டு பணம் எப்படி கிடைக்கும்
விபத்தில் உடல் ஊனம் ஏற்பட்டால் காப்பீட்டு தொகை வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்படும், இதுவே உயிரிழந்தால் அவர்களுடைய நாமினியின் சேமிப்பு கணக்கு மூலம் செலுத்தப்படும்.
எஃப் ஆர் ஐ தேவையா
வாகன விபத்து அல்லது கொலை ஏதேனும் செய்யப்பட்டு இருந்தால் (எஃப் ஆர் ஐ ) எனப்படும் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சினை வராது
இதுவே மிருகம் தாக்கி, மரம் விழுந்து, உயிரிழந்தால் மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள் கட்டாயம் தேவை, உயிரிழந்த பிறகு அவர் எப்படி உயிரிழந்தார் என்ற விவரம் கண்டிப்பாக தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Click here to view our YouTube channel
NRI நபர்கள் இணைய முடியுமா
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் அதற்கு இந்தியாவில் கட்டாயம் வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டத்தில் இணைய முடியும் அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் வரக்கூடிய பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
5 Best Home based business ideas in tamil
காப்பீட்டு நிறுவனங்கள்
பொதுவாக இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கிறது, சில வங்கி நிறுவனங்கள் பிற ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து காப்பீட்டுத் திட்டத்தினை மக்களுக்கு அளிக்கிறது.