POCSO act in full details in tamil 2022

POCSO act in full details in tamil 2022

போக்சோ சட்டம் என்றால் என்ன இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

போக்சோ சட்டம் என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட ஒரு தனி சட்டமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு கடந்த 2012ஆம் ஆண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டு, இப்பொழுது நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் குற்றமிழைத்த நபர் ஜாமீன் பெற முடியாது.

இந்த சட்டத்தினை சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது.

இந்த சட்டத்தின் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 The protection of children from sexual offenses (POCSO) act 2012 ஆங்கிலத்தில் எனப்படும்.

இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் செய்யும் நபர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கிடைக்கிறது என்பதை முழுமையாக பார்ப்போம்.

POCSO act in full details in tamil 2022

சட்டப்பிரிவு 3 மற்றும் 4 இன்படி

குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம் இதற்கு குறைந்தபட்சம் தண்டனை 7 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக உள்ளது கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

சட்டப்பிரிவு 5 மற்றும் 6 இன்படி

குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி நபர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர்கள் அல்லது ஆசிரியர்கள் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும், கூடவே அபராதமும் உண்டு.

சட்டப்பிரிவு 7 மற்றும் 8 இன்படி

குழந்தைகளின் அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம்.

அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் கட்டாயம் வழங்கப்படும், அபராதமும் உண்டு.

POCSO act in full details in tamil 2022

சட்டப்பிரிவு 9 மற்றும் 10 இன்படி

குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும், அபராதமும் உண்டு.

சட்ட பிரிவு 11 மற்றும் 12 இன்படி

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசியில், அலைபேசியில், ஆபாசமாக கெட்ட வார்த்தைகள் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, ஆபாசமாக திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, குற்றம் குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

சட்டப்பிரிவு 13 மற்றும் 14 இன்படி

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, அதனை விற்பது, தயாரிப்பது, மற்றவர்களுக்கு கொடுப்பது, குற்றம்.

இது இணையதளம், கணினி, என்று தொழில்நுட்பரீதியில் இருந்தாலும், குற்றமாக கருதப்படுகிறது.

இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

சட்ட பிரிவு 18 இன்படி

குழந்தைகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயன்றால் ஒரு வருட தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பது குற்றம்.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்படும் பிரிவுகளில் இந்த நபர்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.

kadai valarpu business full details 2021

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 ன்படி குற்றமே 6 மாத தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

Leave a Comment