Pongal gift 1000 best tips in tamil
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வங்கி கணக்குடன் ஆதார் எண் மட்டும் இணைத்துக்கொள்ளுங்கள் கூட்டுறவு துறை புதிய உத்தரவு..!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது கூட்டுறவு துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு மூலம்தான் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு பொருட்களும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி கடுமையாக விவாதிக்கப்பட்டது.
மேலும் வழக்கமாக வழங்கும் வேஷ்டி சேலைகளில் புதிய டிசைன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 ரூபாய் வழங்க முடிவு
இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்த பிறகு இது தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி இன்னும் அரசு தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படாத தகவல் உள்ளது.
வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வங்கிக் கணக்கு விவரம் சரியாக இல்லை
Pongal gift 1000 best tips in tamil இதற்கிடையே தான் குடும்ப அட்டைகளின் வங்கிக் கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
அதாவது சமீபத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர் இருப்பினும்ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருப்பதால்.
வங்கி கணக்கு இல்லை என காட்டுகிறது 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் 14 இலட்சத்து 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என விவரங்கள் கூறுகிறது என தெரிவித்தார்.
புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது
Pongal gift 1000 best tips in tamil இந்த நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை பதிவாளர் சார்பில் துறை அதிகாரிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருப்பவர்களை சந்தித்து அவர்கள் வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர எந்த ஒரு தகவலையும் பெறக்கூடாது.
Pongal gift 1000 best tips in tamil வங்கி கணக்கு எண் இல்லாத இல்லாதவர்களை பொருத்தவரை நேற்று வெளியிடப்பட்ட நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இனைக்காதவர்களிடம் குடும்ப தலைவர்கள் பெயர், குடும்ப அட்டை எண், உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும் என முதலில் கூறப்பட்டு இருந்தது.
தற்போது அது வேண்டாம் என கூட்டுறவுத்துறை பதிவாளர் தனது அறிவிப்பில் மூலம் தெரிவித்துள்ளார்.