மாதம் ரூ.1,000 செலுத்தினால் ரூ.5,27,446 எப்படி ஆண் குழந்தைகளுக்கு அஞ்சலகத்தில் சிறப்பான திட்டம்!( Ponmagan scheme full details in tamil 2021)
இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளுக்கான முதலீடு என்பதை பல குடும்பங்கள் யோசிக்கிறது, ஆனால் அதனை எப்படி நிறைவேற்றுவது என்பது தெரியாமல் சில நேரங்களில் தங்களுடைய பணத்தை வெளியில் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.
ஆனால் விஷயம் தெரிந்த சில நபர்கள் தங்களுடைய பணத்தை பாதுகாப்பாகவும் மற்றும் வட்டி பெறும் வகையில் சேமிக்க தொடங்குகிறார்கள்.
ஆனால் சேமிப்பின் அத்தியாவசியத்தை உணர்ந்து இளம் வயதில் இருந்தே முதலீடு செய்யத் தொடங்கி விடுங்கள், ஆரம்பத்தில் அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.
அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது, என்ற புள்ளிவிவரம் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பிறகு ஆண் குழந்தைக்கு என அரசு துவங்கிய திட்டம்தான் பொன்மகன் சேமிப்பு திட்டம்.
ஆண் குழந்தைகளை மனதில் கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில் சேமிப்பு பழக்கத்தினை நாட்டில் அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் எப்படி இணைவது என்ன ஆவணங்கள் தேவை அதற்கான முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்
ஆண் குழந்தைகளுக்கான அஞ்சலகத்தில் மூலம் வழங்கப்படும் ஒரு திட்டம் தான் இது, இந்தத் திட்டத்திலும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் போலவே ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம்
இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை போல் தான் இதுவும் 15 ஆண்டுகள் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம், அதே போலவே இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
இதற்கு வயது வரம்பு என்ன
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு கணக்கை தொடங்க வேண்டுமென இருக்கும்பொழுது அஞ்சல் அலுவலகத்தை நாடலாம்.
உங்கள் குழந்தைக்கு 10 வயதிற்கு மேல் உள்ளது எனில் அவர்களின் பெயரில் தொடங்கி கொள்ள முடியும், ஒருவேளை உங்கள் குழந்தைக்கு 10 வயதிற்கு குறைவாக இருந்தால் கூட்டு கணக்கினைத் தொடங்கி கொள்ள முடியும்.
இதற்கு தேவையான ஆவணங்கள்
இந்த பொன்மகன் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள மற்ற திட்டங்கள் போலவே தேவைப்படும் ஆவணங்கள் தான்.
குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட சில ஆவணங்கள் தேவைப்படும்.
இதற்கு வட்டி விகிதம் எவ்வளவு
பொதுவாக இந்தியாவில் தபால் துறை திட்டங்களுக்கு வட்டி விகிதம் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் தற்போது வட்டி விகிதம் 7.6 % இருக்கிறது.
இது மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கிறது, அதோடு இந்த திட்டத்தில் அஞ்சல் அலுவலகத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் செய்து கொள்ள முடியும், என்பதால் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் மக்களுக்கு இது ஒரு நல்ல வரவேற்பு.
இதற்கு வரி விலக்கு சதவீதம் எவ்வளவு
இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு இருக்கிறது மேலும் நீங்கள் இந்த கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
அதே போலவே இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும் அடுத்த 5 ஆண்டுகள் தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம் விருப்பமிருந்தால்.
கடன் வசதி இருக்கிறதா
பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்றால் சேமிப்பு திட்டங்களை அவசர காலங்களில் அடமானமாக வைத்து கடன் பெற முடியுமா என்பதுதான் அந்த வகையில் இந்த திட்டம் உங்களுக்கு சற்று ஏற்ற திட்டம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் கடன் வசதி உண்டு, நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதிலிருந்து 3வது நிதி ஆண்டில் இருந்து கடன் பெற்றுக்கொள்ள முடியும் இந்த திட்டத்தில்.
மாதம் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்
மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 12,000 ரூபாய் வரை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் தற்போதைய வட்டி விகிதம் 7.6 நீங்கள் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யும் பொழுது 1,80,000 ரூபாய் முதலீடு செய்து இருப்பீர்கள்.3,47,441 வட்டி விகிதம் ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். 527,446 தொகை ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Click here to view your YouTube channel
பாதுகாப்பு வசதி இருக்கிறதா
இந்த செல்வமகன் திட்டம் இந்திய அரசின் தபால்துறை மூலம் நடத்தப்படுவதால் முதலீடு பாதுகாப்பு என்பது மத்திய அரசால் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் சந்தை அபாயம் இல்லை நிரந்தர வருமானம் கொடுக்ககூடிய ஒரு மகத்தான திட்டம்.
why Cold Drinks are not good for health 2021
இன்றைய காலகட்டங்களில் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமும் இதுதான் லாபம் அதிகம் இல்லாவிட்டாலும் முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இதனால் வரவே வராது.