Ponniyin Selvan 2 Review in tamil
Ponniyin Selvan 2 Review in tamil சோழர்கள் வென்றார்களா பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது..!
அமரர் கல்கி எழுதிய அற்புதமான நாவலை படமாக்க பலரும் முயற்சித்து முடியாமல் போன நிலையில் அதனை இரண்டு பாகமாக எடுத்து சாதித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.
பல ஆண்டுகளாக புத்தகத்தில் நாம் படித்து வந்த நம்முடைய மூதாதையர்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்தியதேவன், நந்தினி.
குந்தவை, சுந்தர சோழர், பூங்குழலி, வானதி,அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்கடியான் நம்பி,மதுராந்தகன், சேந்தன் அமுதன், வீரபாண்டியன், ரவிதாசன், ஊமை ராணி, என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதமாக நடிகர்களை கச்சிதமாக தேர்வு செய்தது படத்திற்கு மிகப்பெரிய வெற்றி என்று சொல்லலாம்.
முதல் பாகத்தை வெளியிட்டு அதிகப்படியான வசூல் வேட்டை நடத்தினார் மணிரத்தினம் 2ம் பாகத்தில் நாவலின் முடிவு, பல சுவாரஸ்யமான கதைகள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம், 2ம் பாகம் எப்படி உள்ளது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் கதை
Ponniyin Selvan 2 Review in tamil கடலில் விழுந்த அருள்மொழிவர்மன்,வந்தியத்தேவன், மரித்துப் போனதாக தஞ்சைக்கு தகவல் கிடைத்த நிலையில் சுந்தர சோழன் குந்தவை என அனைவரும் மனம் உடைந்து போகின்றனர்.
ஆதித்ய கரிகாலனுக்கு அந்த செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் முக்கியமான காரணம் என அவளை கொல்ல பெரும் படையோடு கிளம்பி தஞ்சை நோக்கி வருகிறார், கடலில் விழுந்த இருவரையும் ஊமை ராணி காப்பாற்றுகிறார்.
மதுராந்தகன் மணிமகுடம் தனக்கு வர வேண்டும் என்ற முனைப்பில் சூழ்ச்சிகளை செய்ய தொடங்குகிறார், மறுமுனையில் அமரபூஜாவிற்காக அரியணை காப்பாற்ற முன்னாள் காதலன் ஆதித்யகரிகாலன் கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் நந்தினி செய்கிறார்.
வந்தியத்தேவன் குந்தவை என் காதல் என்ன ஆனது, அருள்மொழிவர்மனை திருமணம் செய்து கொண்டாரா வானதி, ஆதித்யா கரிகாலனை கொன்றது யார், கடைசியில் மணிமகுடம் யாருக்கு சென்றது, என்பதை சில எதிர்பார்க்காத சுவாரஸ்ங்களுடன் காட்டி இருக்கிறார் மணிரத்தினம்.
What are the symptoms of high blood sugar
இந்தப் படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்தது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெரும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழில் வெளியான அமரர் கல்கியின் அனைத்து நாவல்களும் படமாக எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெறும், ஆனால் அதற்கு பொருள் செலவு அதிக தொழில்நுட்ப நிச்சயம் தேவை.