Poppy seeds 5 amazing benefits in tamil
கசகசா அற்புத மருத்துவ குணங்கள் என்ன..!
நம்மளுடைய இந்திய உணவு முறைகளில் கலாச்சாரத்தில் கசகசா விற்கு தனி இடம் உள்ளது இவற்றில் 50% எண்ணெய் தன்மை உள்ளது, இந்த எண்ணெயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.
உணவில் கசகசாவை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகிறது, சரி இந்த பதிவில் கசகச மருத்துவ குணங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன
கசகசாவில் ஏராளமான மருத்துவ சத்துக்கள் நிறைந்துள்ளது அதாவது பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
செரிமான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு
கசகசாவில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைக்கு சரியான தீர்வு அளிக்கிறது.
அதாவது கசகசாவை உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உணவு முறையானது செரிமானம் உண்டாக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
மன அழுத்தம் நீங்க
இன்றைய காலகட்டத்தில் பல நபர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்றால் அது மன அழுத்தம் பிரச்சனை அப்படிப்பட்ட நபர்கள் தொடர்ந்து கசகசாவில் செய்யக்கூடிய பானத்தை குடித்து வருவதால் மன அழுத்த பிரச்சினையை முற்றிலும் நீங்கும்.
அதிகம் மேலும் இந்த மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் தூக்கமின்மை பிரச்சினைக்கு கூட தள்ளப்படுவார்கள்.
எனவே தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு கசகசாவை பாலில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
அம்மை தழும்பு நீங்க
Poppy seeds 5 amazing benefits in tamil கோடை காலம் தொடங்கிவிட்டால் அம்மை போன்ற நோய்கள் ஏற்படும் அந்த அம்மை நோய் சில நாட்களில் சரியாகி விடும் ஆனால் இந்த அம்மை நோயால் ஏற்படும் தழும்புகள் மட்டும் அவ்வளவு எளிதாக மறைவது இல்லை.
முகத்தின் அழகையும், உடலின் அழகையும் கெடுத்து விடும், இந்த அம்மை தழும்பு மறைய 10 கிராம் கசகசாவுடன் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து.
நன்றாக பேஸ்ட் போல் அரைத்து அம்மைத் தழும்புகள், வெட்டுக்காயங்கள், உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அம்மைத் தழும்புகள், வெட்டுக்காயங்கள், புண் காயங்கள், தழும்புகள், மறைய ஆரம்பித்து விடும்.
வாய் புண் முற்றிலும் குணமாக
Poppy seeds 5 amazing benefits in tamil முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை சரியான தூக்கமின்மை, உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சியின்மை, போன்ற காரணங்களால்.
அடிக்கடி வயிற்றில் புண்கள் ஏற்படும் அப்படிப்பட்ட நபர்களுக்கு வாயில் புண்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.
இதனை சரி செய்வதற்கு சிறிதளவு கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரை, மற்றும் தேங்காய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
ஞாபக சக்தி அதிகரிக்க
Poppy seeds 5 amazing benefits in tamil கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து நரம்பு செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குறிப்பாக அறிவுத்திறன் மங்கும் குறைபாட்டினை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது, எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க உணவில் அதிக அளவு கசகசாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.