Possible third wave alert of covid-19 India

இந்தியாவில் கொரோன மூன்றாவது அலை எப்படி இருக்கப் போகிறது தெரியுமா இருக்கும் விடாதீங்க(Possible third wave alert of covid-19 India)

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது கடந்த  2020 ஆண்டு முதல் அலையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், கனடா, உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அதற்கு பிறகு அந்த நாடுகள் சுதாகரித்துக் கொண்ட இந்த வைரஸ்க்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளில்

இப்பொழுது இந்தியாவில் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்தே தீரும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் அதேபோல் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது இது இந்திய சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டுள்ளது

இந்தியாவில் மூன்றாவது அலை வருவதற்கு உறுதியான காரணங்களில் ஒன்று டெல்டா வைரஸ் உருமாற்றம் அடைந்து இப்பொழுது டெல்டா பிளஸ் வைரஸ்யாக  உள்ளது இது அதிக வீரியம் உடையதாக உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

இதுவரை இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியில் இந்த டெல்டா பிளஸ் வைரஸ் எதிராக உடலில் ஆன்டிபாடிகளை மிக சிறந்த முறையில் தூண்டுமா என்ற ஒரு கேள்வி உள்ளது இன்னும் அதை பற்றி முழுமையான ஆராய்ச்சிகள் முடிந்தபாடில்லை

இந்தியாவில் மூன்றாவது அலை குறித்த பயம் மேலும் அதிகரித்துள்ளது எதிர்காலத்தில் வைரஸ் அலையின் பாதையை கணிக்க துல்லியமான வழி இல்லை என்றாலும் கணிப்புகளின் படி உயிர் இழப்புகள் மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்கள் ஆனால் ஆதாரமாக பல இந்திய விஞ்ஞானிகள் இது உண்மையாக இருக்காது என்று கூற முன் வந்துள்ளார்கள்

Possible third wave alert of covid-19 India

COVID-19 மூன்றாவது அலை   எப்போது தாக்கும்

பொதுவாக ஒரு தொற்றுநோய் சமூகத்தில் பரவினால் அதனுடைய முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் வழக்கமாக 10 முதல் 16 வாரங்கள்  இடைவெளி இருக்கும்

இந்தியாவில் மே மாதத்தில் உச்சக்கட்டத்தில் இருந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலை விரைவில் வைரஸின் 3வது அலை ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களில் தாக்கக்கூடும் என்று முன்பு இந்திய சுகாதார மையம் தெரிவித்திருந்தது

ஆனால் இந்தியாவில் மாநிலங்கள் முழுவதும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மற்றும் சர்வேக்கள் இப்பொழுது இந்த வைரஸ் தாமதமான கண்ணோட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளது மூன்றாவது அலை சில மாதங்களுக்குப் பிறகு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது

குறிப்பாக டிசம்பர் மாதத்தில் தாக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சில கவலைகள் நம்பிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது இப்பொழுது இந்தியாவிற்கு மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சோதனை தேவைகளை அதிகரிப்பதே அவசியத்தை வலியுறுத்தி உள்ளது

மூன்றாவதாக அலை வரும் பொழுது அது மாநிலங்கள் வழியாக வித்தியாசமாக பரவக்கூடும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் சில மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதிக்கப்படலாம்

MOST READ     டெல்டா வைரசுக்கு எதிராக எந்த தடுப்பூசியும் சிறப்பாக

Possible third wave alert of covid-19 India

குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா

மூன்றாவது அலை  என்றால் அது குழந்தைகளை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் செய்திகள் வெளிவந்துள்ளன இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சத்து

முதல் அலையில் பெரியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரும் சிறிய அளவில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டார்கள் மூன்றாவது அலை என்று வந்தால் அது குழந்தைகளை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது கணிப்புகள் இருந்தது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

ஆனால் அதை நிரூபிக்க அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை குழந்தைகள் இந்த நோயில் இருந்து அதிக அளவில் சிறந்த முறையில் குணமடைகிறார்கள் என்பதையும் மருத்துவர்கள்  பலமுறை வலியுறுத்தி உள்ளார்கள்

covishield or covaxin best vaccine for covid19

மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து 80% மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு வழிகளில் இந்த கொரோனா  வைரஸ் பாதிப்பில் ஆகியுள்ளார்கள் ஆனால் குழந்தைகளின் உடலில் ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பதால் மூன்றாவது அலை  வந்ததால் வரவிருக்கும் மாதங்களில் குழந்தைககளுக்கு கடுமையாக  இருக்கும் என்பது சாத்தியமில்லை

Leave a Comment