வருகின்ற ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றது சில மாற்றங்கள் கவனமாக இருக்க வேண்டும்.(Post office announced new rules April1)
இந்தியாவில் இருக்கின்ற மக்கள் சேமிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் முதலில் தேர்வு செய்வது இந்திய அஞ்சல் துறை மட்டுமே ஏனென்றால் இதில் வட்டி சற்ற அதிகம் மேலும் இதில் முதலீடு செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான்.
கடந்த சில வருடங்களாக வங்கித் துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்தது ஆனால் அஞ்சல் துறையில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யாமல் இருந்தது ஆனால் வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அஞ்சல் துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது மத்திய அரசு.
அஞ்சல் துறையில் முதலீடு செய்யும் மக்கள் நடுத்தர வர்க்கத்தினர் அதனால் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்கள் இவர்களை கண்டிப்பாக பாதிக்கும் என்பதில் மாற்றம் கிடையாது.
அடிப்படை அஞ்சல் கணக்கில் கொண்டு வரும் மாற்றம்.
அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு கணக்கில் பணத்தை மாதத்திற்கு 4 முறை மட்டுமே இனி இலவசமாக எடுக்க முடியும் அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறார்களோ அதில் 0.5% பணம் பிடித்துக் கொள்ளப்படும் எனினும் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு பிடிக்கப்படும் தொகை.
ஒரு நபர் மாதத்திற்கு குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை மேலும் அதற்குப் பிறகு எடுக்கப்படும் பணத்திற்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும்.
இது ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் குறைந்தது 25 ரூபாய் அல்லது எடுக்கும் பணத்தில் 0.50% இருக்கலாம்.
இந்த கணக்குகளில் டெபாசிட்கள் 1000 ரூபாய் வரை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை அதற்குப் பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்களுக்கு குறைந்தது 25 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும் அல்லது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையில் 0.50% கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கும் நீங்கள் பணம் செலுத்தியாக வேண்டும்.
அஞ்சல் அலுவலக கணக்கின் மூலம் ஆதார் பரிவர்த்தனை (AePS) இலவசமாக செய்து கொள்ளலாம் இதில் எந்த ஒரு வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதாரில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை செலுத்துதல் வங்கியில் இருக்கும் தொகையை விசாரணை.
மினி ஸ்டேட்மென்ட் போன்றவைகள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிந்தது ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
5 Best tips prevent white hair and hair damage
IBPS நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக பரிவர்த்தனை 3 முறை மட்டுமே செய்ய முடியும் அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.