Post office best saving scheme details 2022
5 வருடங்களில் ரூபாய் 4 லட்சம் லாபம் கிடைக்கும் இதனுடன் வரி சலுகையும் கிடைக்கும் அஞ்சலகத்தின் சிறந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அஞ்சலக திட்டங்களில் மிகப்பிரபலமான திட்டங்களில் தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்று.
இந்தியாவை பொருத்தவரையில் என்னதான் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் தனியார் துறையில் இருந்தாலும் எப்பொழுதும் மக்கள் மத்தியில் முன்னிலையில் இருப்பது அஞ்சலக திட்டங்கள் மட்டுமே.
ஏனென்றால் அஞ்சலக திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நம்புகிறார்கள்.
இதில் சந்தை அபாயம் இல்லை அஞ்சலகம் ஒருபோதும் மக்களை ஏமாற்றுவது இல்லை.
சரியான வட்டி தொகையை வழங்குகிறது சரியான நேரத்தில் பணத்தை வழங்குகிறது.
இதில் எந்த ஒரு பயமும் இல்லாமல் மக்கள் நேரடியாக முதலீடு செய்யலாம் என்ற ஓர் விழிப்புணர்வை மக்களிடத்தில் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் முதலில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அஞ்சலக திட்டத்தை தான் தேர்வு செய்கிறார்கள்.
வருமானமும் கிடைக்கும் அதனுடன் வரி சலுகையும் கிடைக்கும்
அஞ்சலகத்தில் தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தினை அஞ்சலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இன்று இது நிலையான வருமானம் தரக்கூடிய சிறந்த திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.
இது 5 வருட திட்டமாகும் முழுக்க முழுக்க சந்தை அபாயம் இல்லாத ஒரு சிறந்த திட்டம்.
நிலையான வருமானம் தரக்கூடிய திட்டம் என்றாலும் இந்த திட்டத்தில் வருமான வரி சட்டப் பிரிவு 80 சி யின் கீழ் வரிச் சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் இணைவதற்கு வயது வரம்பு என்ன
இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 18 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் பெயரில் நீங்கள் வாங்க நினைத்தால் பெற்றோர்கள் பாதுகாப்பாக வாங்கலாம்.
10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் வாங்கிக்கொள்ளலாம்.
இந்தப் பத்திரதிணை மூன்று பேர் வரையில் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் வாங்கிக்கொள்ள முடியும்.
சிறுவர்கள் அல்லது மனநலம் சரியில்லாதவர்கள் பெயரில் பாதுகாவலரின் துணையுடன் இதனை வாங்கிக் கொள்ள முடியும்.
குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதில் அதிகபட்ச வயது வரம்பு இல்லை, இந்தக் கணக்கின் கீழ் எத்தனை வேண்டுமானாலும் நீங்கள் தொடங்கி கொள்ள முடியும்.
வட்டி விகிதம் எவ்வளவு
Post office best saving scheme details 2022 தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் மத்திய அரசால் 6.8 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நீங்கள் ஒரு மிகப்பெரிய குறிப்பிட்ட தொகையை இதில் முதலீடு செய்தால் கட்டாயம் 5 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய ஒரு தொகை கிடைக்கும்.
உதாரணமாக 10லட்ச ரூபாய் முதலீடு செய்து வைத்தால் 5 ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வட்டி கிடைக்கும்.
வரிச்சலுகையும் இருக்கிறது
Post office best saving scheme details 2022 உங்கள் முதலீட்டிற்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை இருக்கிறது, எனினும் முதிர்வின் போது கிடைக்கும் வருமான வரிக்கு உட்பட்டதாகும் இதில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை.
முன்கூட்டியே பணத்தை பெற முடியுமா
Post office best saving scheme details 2022 இந்த திட்டத்தில் தனிநபர்கள் முன்கூட்டியே திரும்பப் பெற முடியாது.
ஆனால் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் உயிரிழந்து விட்டால் அல்லது நீதிமன்ற உத்தரவின் பெயரில் இடையில் முடித்துக் கொள்ள முடியும்.
இதனை ஓராண்டுக்குள் எடுத்தால் முகம் மதிப்பு மட்டுமே செலுத்தப்படும்.
இதே ஒரு வருடத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் முடித்துக் கொண்டால் சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி மட்டுமே வழங்கப்படும்.
இதே 3 வருடத்திற்கு பிறகு தள்ளுபடி மதிப்பிலான விற்பனை செய்து கொள்ளலாம்.