Post office fixed deposit best scheme 2021

Post office fixed deposit best scheme 2021

2021 அஞ்சல் துறையின் தொடர் வைப்பு நிதி திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நமது இணையதளத்தில் அஞ்சல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொடர் வைப்பு நிதி திட்டத்தின் சிறப்புகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

அஞ்சலக துறைகளில் தொடர்ந்து சேமித்து வைப்பதில் இந்த திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது, 5 வருடங்களுக்கு எதிர்கால பயன்பாட்டிற்கு பயனுள்ளவகையில் செயல்படுத்தப்பட்டது தான் இந்த தபால்துறை சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்தியாவில் பல பொதுத்துறை முன்னணி வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகள் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்கள்.

ஆனால் மக்களிடத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும் இடமாக அஞ்சல்துறை இருக்கிறது.

அஞ்சல் துறையில் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்தால் அது விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்து விடுகிறது அதன் மூலம் மக்கள் பயன் அடைகிறார்கள்.

ஐந்து வருட சேமிப்பு திட்டம்

இந்த திட்டமானது 5 வருட கால சேமிப்பு திட்டம் இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் குறிப்பிட்ட தொகையினை 5 வருடத்திற்கு நீங்கள் சேமித்து வரவேண்டும்.

5 வருடத்திற்கு பிறகு நீங்கள் சேமித்த தொகையானது வட்டியுடன் சேர்த்து பெற்றுக்கொள்ள முடியும்.

Post office fixed deposit best scheme 2021

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான இடமாக மக்களிடத்தில் இருக்கிறது.

திட்டத்தில் சேமித்து வைத்து வந்த தொகை எந்தவித பாதிப்பு இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் சேமிப்பதற்கு குறைந்தபட்சம் 100/- ரூபாய் இருந்தால் போதும்.

இந்த திட்டத்தை யாரெல்லாம் தொடங்கலாம்

இந்த தொடர் சேமிப்பு திட்டத்தை அனைத்து இந்திய குடிமக்களும் தொடங்க முடியும்.

சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு எந்தவித வயது வரம்பு இல்லை 10 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் சான்றுடன் சேமிப்பு கணக்கினை தொடங்கி கொள்ள முடியும்.

10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் சேமிப்பு கணக்கினை அவர்களே தொடங்கி கொள்ளமுடியும் எந்தவித கூட்டு கணக்கு இல்லாமல்.

சேமிப்பு கணக்கை எப்படி தொடங்கலாம்

இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை பணம் அல்லது காசோலையாகவும் கொடுத்து தொடங்கி கொள்ள முடியும்.

ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்கினை தொடங்கி கொள்ள முடியும்.

சேமிப்பு கணக்கு மாற்றம்

இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் கூட்டுக் கணக்காக இருக்கும் சேமிப்பு திட்டத்தினை தனி கணக்காகும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது.

தனிநபர் கணக்கு கூட்டு கணக்காகும் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் துறையிலும் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இந்த சேமிப்பு கணக்கினை நீங்கள் துவங்கும்போது யாரை வேண்டுமானாலும் நாமினியாக நியமித்துக் கொள்ளலாம், அது உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபராக மட்டும் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டு, ஃபோட்டோ, பான் கார்டு, குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கினை தொடங்குகிறீர்கள் என்றால் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் நீங்கள் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம்.

குறிப்பாக மாதம் டெபாசிட் செய்த தொகையினை இடையில் மாற்றமுடியாது உதாரணத்திற்கு முதல் மாதம் நீங்கள் 100/- ரூபாய் செலுத்தினால் தொடர்ந்து அந்த தொகையை செலுத்த வேண்டும் இரண்டு மாதம் கழித்து 200/- என்ற மாற்று தொகையை செலுத்த முடியாது.

Post office fixed deposit best scheme 2021

முதலீடு செய்யும் தேதி

RD சேமிப்பு திட்டத்தில் கணக்கைத் துவங்கிய தேதியில் இருந்து அடுத்த மாத கணக்கின் முந்தைய நாளில் சேமிப்பு கணக்கினை செலுத்திவிட வேண்டும் ஒரு நாள் தவறினால் கூட அதற்கு அபராத தொகையை நீங்கள் கட்டாயம் கட்ட வேண்டும்.

நீங்கள் செலுத்தும் ரூ100/- கானா அபராத தொகை ரூ 1 மட்டும்தான் அபராதமாக செலுத்த வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து நான்கு மாத சேமிப்பில் பணம் செலுத்தாமல் விட்டால் சேமிப்பு கணக்கு தானாக நிறுத்தப்பட்டுவிடும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு 5.8 சதவீத வட்டி கொடுக்கப்பட்டு வருகிறது, கணக்கினை தொடங்கியபோது கொடுக்கப்பட்ட வட்டிதான் 5 வருடம் வரை  கொடுக்கப்படும்.

அரசாங்கம் 3 மாதத்திற்கு ஒரு முறை வட்டி மாற்றம் செய்தாலும் இந்த சேமிப்பு திட்டத்தில் 5 வருடத்திற்கு வட்டி மாறாமல் அதே வட்டி தொகையை தான் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் வருமான வரி சலுகை என்பது எதுவும் கிடையாது.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கணக்கீடு

ஒரு நபர் மாதம் குறைந்தபட்சம் ரூ.100/- ரூபாய் முதலீடு செய்து வந்தால் வருடத்திற்கு ரூபாய்.1200/- செலுத்த வேண்டும். 5 வருடத்திற்கு ரூ.6000/- தொகையினை செலுத்தி முடித்திருப்பார்.

5 வருடத்திற்கு கிடைக்கும் வட்டி பணமானது 969.5.

5 வருடம் கழித்து பின்னர் அந்த நபருக்கு வட்டியுடன் கிடைக்கும் தொகை ரூபாய் 6969/-கிடைக்கும்.

small new profitable business ideas 2021

இதுபோன்ற ஒவ்வொரு திட்டத்திற்கும் கிடைக்கும் வட்டி பணத்தை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள அஞ்சல்துறை நாடலாம்.

Leave a Comment