PPF loan you can get loan at 1 interest rate
அஞ்சலகத்தில் அசத்தலான பிபிஎஃப் கொடுக்கும் வாய்ப்பு யாரெல்லாம் பயன் பெறலாம்…!
இன்றைய காலகட்டங்களில் கடன் வாங்குவது என்பது மிக எளிதான ஒரு விஷயம் இல்லை, அதற்கு வட்டி விகிதம் என்பது தனியார் துறையில் அதிகமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் அரசாங்க வங்கிகளில் கடன் பெறுவது என்பது அதற்கு பல்வேறு வகையான சட்ட விதிமுறைகள் இருக்கிறது.
அதனால் கடன் எங்கு வாங்க வேண்டும் என முடிவு எடுத்தாலும் அதற்கு சில நாட்கள் ஆகலாம் இது பெரும் சுமையாக இருக்கிறது மக்களுக்கு.
இதற்கு உங்களிடம் இருக்கும் பிஎப் ஆக்கவுண்ட் கொண்டு நீங்கள் எளிதாக கடன் வாங்கலாம்.
உங்களுக்கு வட்டி குறைவான கடன் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் அது விரைவில் கிடைக்கும் என்றால் இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.
தனிநபர் கடன் என்றாலே ஒரு நல்ல விஷயம் தான் உதாரணத்திற்கு தனிநபர் கடன் என்றாலே வட்டி விகிதம் மிகக் குறைந்த பட்சமாக 8% அதற்கு செயல்பட்டு கட்டணம், மற்ற கட்டணங்கள், என அனைத்தும் சேர்க்கும் போது இன்னும் அதிகரிக்கும்.
ஆனால் 1 சதவீத வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும் என்பது அதனை எப்படிப் பெறுவது என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குறைந்த வட்டியில் கடன்
தபால் துறையில் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் (PF) திட்டம் வைத்திருப்பவர்கள் தான் இந்த திட்டத்தில் கடன் வாங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் அல்லது இடமாக கூட இருக்கிறது எல்லாவற்றுக்கும் மேலாக அவசர கால கட்டங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ள வசதி இதில் இருக்கிறது.
இதனால் இந்த திட்டம் மக்களிடத்தில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்றுள்ளது என்பது உண்மை.
வட்டி விகித சதவீதம் எவ்வளவு
இந்த வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இந்த கணக்கு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரையில் இந்தக் கணக்கில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கடனுக்கு வட்டி விகிதம் என்பது மிகக் குறைந்த 1% மட்டுமே அரசு நிர்ணயித்துள்ளது, இது ஒரு குறுகிய கால கடன் ஆகும் அதோடு மற்ற தனிநபர் கடன், அடமான கடன், நகைக் கடன் உடன், ஒப்பிடும்போது வட்டி விகிதம் மிக மிக குறைவு.
எளிய முறையில் கடன் பெற முடியும் என்பதாலும், சிறந்த திட்டமாக இது பார்க்கப்படுகிறது,வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்தவர்கள் மட்டுமே கடன் பெற முடியும் என்பது ஒரு உண்மையான விஷயம்.
அவசரத் தேவைக்கு கைக்கொடுக்கும்
கொரோனா வைரஸ் போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் உங்களுக்கு வெளியில் கடன் கிடைப்பது என்பது ஒரு அரிதான விஷயம் அப்படி நெருக்கடியான காலத்தில் கடன் கிடைத்தாலும் அதற்கு வட்டி விகிதம் என்பது அதிகமாக இருக்கும்.
ஆனால் உங்களுடைய வருங்கால வைப்பு நிதி மூலம் (PPF) உங்களுக்கு 1% வட்டியில் கடன் கிடைப்பது என்பதை நினைத்துப் பாருங்கள் எவ்வளவு ஒரு எளிமையான விஷயம்.
ஆக அப்படி பார்க்கையில் இது உண்மையில் அவசர தேவைக்கு மிக பயனுள்ள ஒரு திட்டமாக இருக்கிறது எனினும் இதனை மிக அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது சிறந்த புத்திசாலித்தனம்.
ஏனெனில் இது சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படும் நிலையில் மிக அவசிய தேவை இல்லாமல் வாங்குவது கூடாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
பொருளாதார நிபுணர்களின் கருத்து என்ன
நடைமுறையில் உள்ள பிற சில்லறை வங்கி கடனை (PPF)வருங்கால வைப்பு தொகைக்கு எதிரான கடன் உடன் ஒப்பிடுகையில் (PPF) வைப்பு தொகைக்கு எதிரான கடன், நிச்சயம் தனிநபர் கடன், நகை கடன் அல்லது வங்கி கடன் போன்ற கடன்களை விட மிகவும் குறைவானது மிக விரைவில் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும் இதில் இருக்கிற சிறப்பம்சம்.
சிறந்த புத்திசாலித்தனம் இதுதான்
இந்தத் திட்டத்தில் கடன் பெறுவது என்பது ஒரு நபரின் (PPF) வருங்கால வைப்பு தொகை எவ்வளவு என்பதைப் பொறுத்து மாறுபடும்.
ஆனால் மற்ற வங்கி கடன்கள் என்பது ஒரு நபரின் வருமானத்திற்கு ஏற்ப மாறுபடும், ஒருவருக்கு நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது தேவைப்படும் தொகைக்கு (PPF) வருங்கால வைப்பு நிதி கணக்கு மூலம் எளிமையாக கடன் பெற முடியும் என்றால்.
அவர்கள் இந்த வாய்ப்பை அவசர தேவைக்கு பயன்படுத்துவது என்பது புத்திசாலித்தனம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எவ்வளவு தொகை கிடைக்கும்
பொதுவாக இந்தத் திட்டத்தில் நீங்கள் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் பொழுது ஒரு ஆண்டுக்கு முந்தைய மற்றும் இரண்டாம் ஆண்டின் இறுதியில் உங்கள் வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கில் உள்ள தொகையில் இருந்து அதிகபட்சம் 25% வரை கடன் பெறலாம்.
Click here to view our YouTube channel
ஒரு நபர் 2022 ஏப்ரலில் (2021-2022) நிதி ஆண்டில் கடன் பெற விண்ணப்பித்தால் மார்ச் 2022 இறுதியில் இருந்த தொகையில் 25% கடனாகப் பெற்றுக் கொள்ளமுடியும் தோராயமாக.
வட்டி பலமடங்கு அதிகமாகும்
ஒருவேளை கடன் வாங்கிய நபர் இந்த கடனை சரியாக திரும்ப செலுத்தாத பட்சத்தில் இதற்கு வட்டி விகிதம் என்பது அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
Post office PPF Best scheme details in Tamil
தற்போதைய காலகட்டத்தில் இந்த திட்டத்தினை அஞ்சலகம் மற்றும் வங்கிகளின் மூலம் இணைந்துகொள்ளலாம்,வங்கியில் இணையதளம் மூலம் கூட இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.