Pradhan Mantri Shram Yogi Maan best plan 2022
திருமணமானவர்களுக்கு மோடி அரசின் சூப்பர் திட்டம் வெறும் 200 ரூபாய்..!
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் முதலீடு செய்து அதன் மூலம் வருடம் 72,000 ரூபாய் அளவிலான ஓய்வூதியத் திட்டத்தை பெற முடியும் என்பதால் மிகப்பெரிய பலனளிக்க உள்ளது, சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் எப்படி முதலீடு செய்ய முடியும்.
யாருக்கெல்லாம் இந்த திட்டம் சரியாக இருக்கும்
அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டில் பணிபுரிபவர்கள், சாலையோர வியாபாரிகள், மதிய உணவு தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள்.
செங்கல் சூளை தொழிலாளர்கள்,செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்குப்பைகளை பொறுக்கும் நபர்கள்,வீட்டுப் பணியாளர்கள்.
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு, விவசாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மீனவர்கள், கைத்தறி தொழிலாளர்கள்,ஆடியோ வீடியோ தொழிலாளர்களுக்கு, திட்டம் உருவாக்கப்பட்டது.
மாத வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்
இந்த திட்டத்தில் மேலே கூறப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் மாத வருமானம் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக உள்ளவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமாயின், ஒருவர் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதில் இருக்கும் நிபந்தனைகள் என்ன
மேலும் இந்த திட்டத்தை பெறுபவர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் ஊழியர்களின் மாநில காப்பீட்டு கழகம் திட்டம் (NPS).
அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (PF) ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடாது.
மேலும் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது, இவை அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
குறைந்தபட்ச பாதுகாப்பு அளிக்கும் ஓய்வு ஊதியம்
இந்த திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு நபரும் 60 வயதை எட்டிய பிறகு குறைந்தபட்சம் மாதம் 3,000/- ரூபாய் ஓய்வூதியத்தை பெற முடியும் இதன் மூலம் ஒரு வருடத்திற்கு 36,000/- ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்.
ஓய்வூதியம் எப்படி வழங்கப்படும்
Pradhan Mantri Shram Yogi Maan best plan 2022 பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் போது சந்தாதாரர் ஒருவேளை உயிரிழந்தால் பயனாளியின் மனைவி பயனாளி பெரும் ஓய்வூதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு, குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டும் பொருந்தும்.
இதில் இணைவது எப்படி
Pradhan Mantri Shram Yogi Maan best plan 2022 முதலீடு செய்ய விருப்பம் உள்ள நபர்கள் தங்களுடைய மொபைல்போன் எண், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.
தகுதியான சந்தாதாரர் அருகில் உள்ள மக்கள் கணினி மையத்திற்கு சென்று (CSC) சுய சான்றிதழ் அடிப்படையில் ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை பயன்படுத்தி இந்த திட்டத்தில் இணையலாம்.
ஓய்வூதியத் தொகை எவ்வளவு
Pradhan Mantri Shram Yogi Maan best plan 2022 கணவன் மனைவி இருவருக்கும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 72,000/- ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படும் கணவன் மனைவி இருவரும் 30 வயதுக்குள் இருந்தால் இந்த திட்டங்களில் 200/- ரூபாய் செலுத்தி முதலீடு செய்து வைக்கலாம்.
தனியார் பங்களிப்பு ஒரு வருடத்திற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 1,200 ரூபாய் இருக்கும் 60 வயதை அடைந்த பிறகு தனிநபர் ஓய்வூதியமாக ஆண்டுக்கு ரூ 36,000/- தம்பதிகளுக்கு அதுவே 72,000/- ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள்.