Prawn farming business full details 2021

Prawn farming business full details 2021

இறால் வளர்ப்பு தொழில் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்

நண்பர்களுக்கு வணக்கம் இன்று நமது இணையதளத்தில் அனைவருக்கும் பிடித்தமான இறால் வளர்ப்பு தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

இறால் மீன் பொதுவாக உப்பு நீரிலும், நன்னீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை இறால் மீன் என்று சொல்வார்கள், மனிதர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய இறைச்சி, இறால் மீன் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது, பின்புறமாக மட்டும் நீந்தக் கூடிய உயிரினம்மாகும்.

கடலில் வாழும் பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால் மீன்கள் நல்ல உணவாக அமைகிறது, கடல்வாழ் உயிரினங்களில் இறந்த உடல்களை கடல் நீரில் உள்ள மீன்கள் உண்டு வாழ்கிறது, அலைகடலின் தூய்மைப் பணியாளர் என்று அழைக்கிறார்கள் இறால் மீனை,  ஆழ்கடல் பகுதியில் மட்டுமே முட்டையிடும் தன்மை கொண்டது இறால் மீன்.

இறால் மீன் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகிறது கரைக்கு, இந்த குஞ்சுகள் சதுப்புநிலக் காடுகளிலும், கடலோர கரைகளிலும் ஒதுங்குகிறது.

சதுப்பு நிலக்காடுகள் கரையோரங்களில் மீன்பிடி தொழில் நடப்பதால் இறால் மீன் குஞ்சுகள் இளம் பருவத்திலேயே பெரும்பாலும் அழிந்து விடுகிறது, இதனால் ஆழ்கடல் பகுதியில் இறால் மீன் எண்ணிக்கை பெரும்பாலும் குறைந்து விடுகிறது.

Prawn farming business full details 2021

மற்ற கடல் உணவு பொருட்களுடன் இறால் மீனை ஒப்பிடும்பொழுது கால்சியம், அயோடின், புரதச்சத்து, இவைகளில் நிறைந்துள்ளது.

இறால் மீன்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது, இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகை சேர்ந்தது இதனை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் இதய தமணிகளில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

ஆசியக் கண்டத்தில் இறால் மீன் உற்பத்தியில் முதன்மையாக இருப்பது சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிக அளவில் இறால் மீன் உற்பத்தி நடைபெறுகிறது.

நெல் விவசாயத்திற்கு இணையாகவே வணிகர்கள் இதனை நடத்துவார்கள், இதிலும் விதை அறுவடை என்ற வார்த்தையை அடிக்கடி இந்த மீன் பண்ணை வைத்திருக்கும் நபர்கள் பயன்படுத்துவார்கள்.

கடலோர கரையோரம் உப்பு நீரில் இறால் மீன் வளர்ப்பு என்பது பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது, ஆனால் நன்னீர் இறால் வளர்ப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ளது.

நல்ல தண்ணீர் உள்ள வயல்களுக்கு நடுவே கூட இந்த நன்னீர் இறால் வளர்ப்பு நடைபெறுவதுதான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்  அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Prawn farming business full details 2021

இறால் மீன்  வளர்ப்பு முறை

இந்தத் தொழிலை நீங்கள் செய்யவேண்டும் என்று விரும்பினால் இதனை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு மத்திய, மாநில அரசுகள், நடத்தும் தொழில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

நீர்வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறுகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி அடையும் கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நீலக்கால் மற்றும் மோட்டு இறாலை தனியாகவோ அல்லது கொண்டை மீன்களுடன் சேர்த்து வளர்த்துக்கொள்ளலாம்.

நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுமார் ஒரு மீட்டர் ஆழத்துக்கு மணல், வண்டல்மண், களிமண், கலவை 1.5:1:1.5 என்ற விகிதத்தில், ஒவ்வொரு குளமும், குறைந்தபட்சம் 1,000 முதல் அதிகபட்சம் 5,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டாயம் அமைக்க வேண்டும்.

முதலில் நிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும் 500 கிலோ முதல் 600 கிலோ வரை நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும், கார அமிலத்தன்மை 8.5 முதல் 9.5 அளவு வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக் கழிவு, ஆகியவை குளத்தில் இட்டு குளத்தில் நீர் மட்டத்தை 30 முதல் 40 சென்டிமீட்டர் அளவில் உயர்த்த வேண்டும்.

பின்பு 100 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் அடியுரமாக முதலில் போட வேண்டும். அதற்கு பின்பு 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் மாறியபின் நீர்மட்டத்தை நீங்கள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அதனை அறுவடை காலம் வரை பராமரித்தால் போதும்.

இறால் மீன் இருப்பு வைத்தல் அல்லது வளர்ப்பு முறை

தனியார் மற்றும் அரசு இறால் மீன் பண்ணைகளிலிருந்து நன்னீர் இறாலை நீங்கள் தேவையான அளவிற்கு வாங்கி எக்டருக்கு 50,000 குறைந்தபட்சம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கள் சூழ்நிலையில் வைத்து இரண்டு வாரங்களுக்கு உணவு கொடுத்த பின் குளத்தில் விட்டால் இந்த மீன் பிழைப்பு விகிதம் அதிகமாகும், இதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன் இருப்பு செய்த பின் பராமரிப்பு முறைகள்.

நீங்கள் இரால் மீன் இருப்பு செய்தபின் குளத்தின் நீரைப் பாதுகாப்பது மிக மிக அவசியம் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன், கார அமிலத்தன்மை, மற்றும் உயிரினங்களின் உற்பத்தியை கண்காணிக்கவேண்டும்.

26 முதல் 32 டிகிரி செல்சியஸ் 65 மி.கி /லிட்டர் இருந்தால் இரால் மீன் நன்றாக வளரும், நீரில் பிராணவாயு (Oxygen) அளவை சரியாக கட்டாயம் பராமரிக்க வேண்டும். அதற்கு காற்றோட்டம் இயந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

இறால் மீன் தீவனம் முறைகள்

இந்த மீனுக்கு நீங்கள் ஈரமாகவும் அல்லது காய்ந்த நிலையில் உணவை தாராளமாக கொடுக்கலாம். மீன்கள், நிலக்கடலை, குருணை அரிசி, கோதுமை புண்ணாக்கு, மரவள்ளிக்கிழங்கு மாவு, ஆகியவை கொடுக்கலாம்.

தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் மீன் தீவனத்தை முறுக்கு வற்றல் வடிவம் போல் செய்து விற்பனை செய்து வருகிறது அதனை கூட நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இறால் மீன் அறுவடை மற்றும் விற்பனை நிலையம்

5 மாதங்களில் இதனுடைய சராசரி 50 கிராம் அளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும் ,நீலகால் இறால் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும், இறால்களை பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்  நீங்கள் பிடித்துக் கொள்ளலாம்.

ஒரு ஹெக்டேரில் நீர்பரப்பு, நிலம், நீர், காற்று இயந்திரம், மின் இணைப்பு, தங்கும் அறை வரை, பொருளாதார செலவு குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாயில் தொடங்கும்.

இது மட்டுமில்லாமல் மற்ற செலவுகள், இறால் மீன் விலை, தீவனம், உரம் மற்றும் பராமரிப்பு செலவுகள் என இதற்கும் 4 லட்ச ரூபாய் ஆகும்.

நீங்கள் 5 மாதங்களில் நன்றாக அறுவடை செய்தால், சராசரி வளர்ச்சி 50 கிராம் வீதம் 1500 கிலோ விற்பனை 4 லட்சம் ரூபாய் வரை ஈட்ட முடியும்.

Click here to view our YouTube channel

ஒரு அறுவடைக்கு நிகரலாபம் நீங்கள் பராமரிக்கும் முறை, செலவுகளை கட்டுப்படுத்துதல், அறுவடை செய்யும்பொழுது மீன் விற்பனை விலை, இவற்றின் மூலம் சரியாக தீர்மானிக்க முடியும்.

PPF loan you can get loan at 1 interest rate

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இதற்கான தனியாக மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டு இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, இந்த தொழிலை எளிதாக தொடங்கலாம்.

 

Leave a Comment