Pregnancy Diabetes best treatment 2022
கர்ப்ப கால சர்க்கரை நோய் வரக் காரணங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் என்ன..!
உலக அளவில் அதிக பெண்கள் கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
நோயை கட்டுப்பாட்டில் வைக்க விட்டால் தாயும் குழந்தையும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
உணவுக்கட்டுப்பாடு இன்சுலின், ஊசி எடுத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் தாய் போதுமான அளவு இன்சுலின் சுரப்பு, சரியான இரத்த சர்க்கரையின் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த இன்சுலின், இரத்த சர்க்கரை நோயிலும் சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் இருக்கிறது என அர்த்தம், 25 கர்ப்பிணி தாய்மார்களில் ஒரு நபருக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
குழந்தை வயிற்றில் கருவாக உருவாகும் போது நஞ்சுக்கொடி மற்றும் நஞ்சுப்பையை தோன்றி குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
கரு உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படும் சில ஹார்மோன்கள் இன்சுலின் சுரப்பை தடை செய்வதுடன் இன்சுலின் கிரகிக்கும் செல்களின் ஆற்றல் குறைக்கிறது.
ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படுத்துவதால் தாயின் சர்க்கரையின் அளவு அதிகரிக்க நேரிடும்.
குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை செல்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதால் இன்சுலின் தேவையும் அதிகரிக்கிறது.
கர்ப்பகால ஹார்மோன்களின் மாறுபாட்டால் செல்கள் இன்சுலின் பயன்படுத்தாமல் போய்விடுகிறது, இதுவே கர்ப்ப கால சர்க்கரை நோய் உருவாவதற்கு முக்கிய காரணம்.
யாரெல்லாம் மிக கவனமாக இருக்க வேண்டும்
Pregnancy Diabetes best treatment 2022 நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தாயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குழந்தையின் நஞ்சுப் பையைத் தாண்டி செல்வது போல் இன்சுலின் செல்களால் நஞ்சுப் பையைத் தாண்டி செல்ல முடியாததால்.
தாயின் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது போல கருவிலுள்ள குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
Pregnancy Diabetes best treatment 2022 இதற்காக கருவில் உள்ள குழந்தையின் கணையம் ஆரம்ப காலத்திலேயே அதிகமான அளவு இன்சுலின் சுரக்க செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்படும்.
இதனால் கிடைத்த ஆற்றலானது கொழுப்புச் செல்களால் குழந்தையின் தோலுக்கு அடியிலும் கல்லீரலும் சேமிக்கப்படுகிறது, இதனால் வயிற்றுக்குள் குழந்தை எடை அதிகரித்து கொழுகொழுவென்று வளர ஆரம்பிக்கிறது.
இவ்வாறு கொழுகொழுன்னு குழந்தை பிரசவத்துக்கு பின் வெளியே வந்ததும் திடீரென்று ரத்த சர்க்கரை அளவு குறைந்து, இன்சுலின் சுரப்பு அதிகரித்து, மூச்சுத் திணறலுக்கு அல்லது குறைந்த ரத்த சர்க்கரை நோய்க்கு ஆளாகிறது.
இதனால் கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ள தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை.
கர்ப்ப கால சர்க்கரை நோய் வர முக்கியக் காரணங்கள் என்ன
Pregnancy Diabetes best treatment 2022 பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் கட்டாயம் இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தாமதமாக கருத்தரிப்பது
உடல் பருமன்
முந்தைய கருத்தரிப்பின் போது கர்ப்பகால சர்க்கரை நோய் இருந்தால்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை என்ன
கர்ப்ப கால சர்க்கரை நோய் வராமல் இருக்க சரிவிகித உணவு கட்டாயம் தேவை.
மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மருந்துகள் மற்றும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்சுலின் சுரப்பு எப்பொழுதும் சீராக இருக்க வேண்டும்.
முறையான ரத்த சர்க்கரை பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.
உணவில் அடிக்கடி சீரகம், கருஞ்சீரகம், எள், முருங்கைக்கீரை,ஆகியவற்றை சேர்ப்பது கட்டாயமாக்க வேண்டும்.
சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
Pregnancy Diabetes best treatment 2022 கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் கம்பு, ஓட்ஸ், சிவப்பு அரிசி, மட்டை அவல், சம்பா ரவை, கேழ்வரகு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக கர்ப்ப கால சர்க்கரை நோய் வராமலிருக்க கர்ப்பிணி பெண்கள் உணவில் அதிக அளவு சுரைக்காய், பாவற்காய், வாழைத் தண்டு.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
வெள்ளை முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம், வாழைக்காய், பிஞ்சு கத்திரிக்காய் மற்றும் முட்டைகோஸ்.
நாட்டுக்கோழி, முட்டை, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதினால் இவை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.