Profitable cottage industry in tamil
சாணல் பொருள் தயாரிப்பில் நல்ல லாபம் பெறலாம் அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
இப்பொழுது மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்று வருவது என்னவென்றால் இயற்கையில் கிடைக்கக்கூடிய எந்த ஒரு பொருளும்.
பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி விட்டதால் மண், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படைந்துள்ளதை, மக்கள் உணர்ந்து உள்ளார்கள்.
அரசாங்கமும் சரி, மக்களும் சரி, சுற்றுச்சூழலை இப்பொழுது பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.
முன்பொரு காலத்தில் துணியில் செய்யப்பட்ட மஞ்சள் பைக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்தது, அதுமட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றது மஞ்சள் துணிப்பை.
தொடக்கத்தில் சணல் மூலம் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது தற்போது பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை இப்பொழுது தயாரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால், பலர் இதை விரும்புகிறார்கள்.
எனவே சணல் பொருள் தயாரிப்பு முறை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் அதிகமான பணம் உங்களால் சம்பாதிக்க முடியும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த சானல் பொருள் தயாரிப்பு மாவட்ட நிர்வாகமும் மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகிறது கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கிறது.
அரசு அலுவலகங்கள், அரசு கலைக்கல்லூரி, போன்ற இடங்களில் கண்காட்சி நடத்தி அதிகமான ஆர்டர்களை பெறலாம்.
தென்னை, வாழை நார், மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது இந்த திட்டம் இதன் சிறப்பு.
பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக அளவில் எப்போதும் வரவேற்பு இருக்கிறது.
பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை எளிமையாக செய்யலாம், இதில் நல்ல வளர்ச்சி உள்ளது, சணல் பொருட்கள் அனைத்தும் சந்தையில் கிடைக்கிறது, விற்பனையிலும் அதிகமாக லாபம் பெற முடியும்.
இருப்பினும் இந்த சணல் பொருள் தயாரிப்பு முறை பொருத்தவரை சணல் பை தயாரிப்பு பயிற்சி தெரிந்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள்.
ஒரு வாரத்திலும் தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் எளிமையாக விரைவாக கற்றுக் கொள்ள முடியும்.
சணல் பை தயாரிப்பு விவரம்
சணல் துணியை கொண்டு 35 வகையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், ஒரு நாள் செலவு குறைந்தபட்சம் ரூபாய் 1,000/- முதல் மாதம் 25 நாட்களுக்கு ரூபாய் 25,000/-
இதர செலவுக்கு ஒரு 5,000/- என மாத உற்பத்திக்கு குறைந்தபட்சம் 30,000/- என்று சணல் பொருள் தயாரிப்பு முறை கட்டாயம் தேவைப்படும்.
சணல் பை மூலம் கிடைக்கும் வருவாய்
சணல் பை வருவாய் மாதம் ஒரு 25 ஆயிரம் செலவில் தயாரித்த பொருட்களை சில்லறையாகவும், மொத்தமாகவும், 75% லாபத்தில் விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ 43 ஆயிரம் லாபம் ரூ18,000/- விற்பனை அதிகரித்தால், அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷின்கள் மற்றும் உற்பத்தி மூலம் அதிகமாக பெருக்க முடியும்.
சணல் பை சந்தை வாய்ப்பு
கடை தொடங்கி விற்பனை செய்யலாம், அரசு அலுவலகங்களில் அடர் எடுத்து விற்பனை செய்யலாம், வீட்டிலிருந்து விற்பனை செய்யலாம், இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம்.
திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு அதிக அளவில் ஆடர் பெறலாம்.
அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பேன்சி கடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்ய முடியும்.
சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம்.
மின்சாரத்தில் இயங்கும் தையல் மெஷின் கொண்டுதான், இதனை தைக்க முடியும், சாதாரண துணிப்பைகளை தைப்பது போல் எளிதாக இதனை தைக்க முடியாது.
இந்த சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும் நீங்கள் நன்றாக பயிற்சி எடுத்தால் மட்டுமே இதனை உங்களால் சரியாக கையாள முடியும்.
சணல் பை அதிக அளவில் கிடைக்கும் இடங்கள்
சணல் துணி கொல்கத்தாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது, அங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும், கொள்முதல் செய்யலாம் நீங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏற்ற விலை குறையும்.
சென்னை, புதுவையில், கிடைக்கும் காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி, ஆகிய இடங்களில் கிடைக்கிறது மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.
தனித்துவத்தை அறிந்து வைப்பது முக்கியத்துவம்
உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும், அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும்.
தாம்பூலம் தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்தலாம்.
காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும், அதில் இரண்டு அறைகள் மற்றும் வெளியில் ஒரு அறை விட்டால் மிகவும் அழகாக இருக்கும்.
மணி பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி, துணி பைல் மற்றும் லேப்டாப் பை, தயாரிக்க உயர்தர சணல் துணி தேவைப்படும்.
சணல் பை தயாரிக்க தேவையான முதலீடு
சணல் பொருள் தயாரிப்பு முறையில் உற்பத்தி இருப்பு வைத்தல் விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை கட்டாயம் தேவை.
மொத்தமாக முதலீடு ரூபாய் 25,000/- வரை ஆரம்பத்தில் தேவைப்படும்.
வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின் டேபிள் போன்றவை இருந்தால் முதலீட்டுக்கு ரூபாய் 15,000 ஒதுக்கினால் போதும்.
இந்தியாவில் 50% குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு
தேவையான வாய்ப்புகள்
இந்த பை அதிக நாட்களுக்கு எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் தாங்கக்கூடியது.
நீங்கள் இந்தப் பையை விற்பனை செய்வதற்கு தனியாக இணையதளம் அல்லது அமேசான், ஃப்ளிப்கார்ட், போன்றவற்றிலும் விற்பனையைத் தொடங்கலாம்.
Neurobion forte tablet uses 5 benefits
பேன்சி ஸ்டோர் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் அதிக அளவில் நீங்கள் ஆர்டர் பெற்று சப்ளை செய்வதன் மூலம் உங்களுடைய உற்பத்தி மற்றும் இலாப விகிதம் பல மடங்கு அதிகரிக்கும்.