Protein powder best uses and effect 2022

Protein powder best uses and effect 2022

புரோட்டின் பவுடர் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!

இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்ய இளைஞர்களிடையே கடுமையான ஆர்வம் மற்றும் போட்டி இருக்கிறது.

இதை இப்பொழுது மிகப்பெரிய ஒரு வணிகமாக இந்த உலகம் மாற்றிவிட்டது, அதுமட்டுமில்லாமல் இன்றைய இளைஞர்கள் இயற்கை உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச் சத்துக்களை விட.

புரோட்டின் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச் சத்துக்களை அதிக அளவு விரும்புகிறார்கள்.

ஏனென்றால் குறுகிய காலத்தில் அழகிய உடலை பெற முடியும் அதுமட்டுமில்லாமல் புரோட்டின் பவுடர்களை பெரும் தொகை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இது நல்லதா அல்லது பல்வேறு பக்க விளைவுகளை கொடுக்குமா என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Protein powder best uses and effect 2022

புரதச்சத்து என்றால் என்ன

புரதச்சத்து என்பது சுமார் 20க்கும் மேற்பட்ட பொருட்களின் கூட்டுச் சேர்க்கை, இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது, செல்களில் தேய்மானத்தை குறைத்து புதுப்பிப்பதற்கும்.

காயம், புண் போன்றவற்றை விரைவில் குணப்படுத்துவதற்கும், உதவுகிறது.

என்சைம் ஹார்மோன்கள், ஹீமோக்ளோபின், போன்றவை உற்பத்தியாக புரதச்சத்து கட்டாயம் தேவை உடலுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

தினமும் சராசரியாக குறைந்தது 50 கிராம் புரதச்சத்து கட்டாயம் உடலுக்கு தேவை, இதை உணவிலிருந்து மட்டுமே பெற முடியும்.

இயற்கையாக சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள், கொட்டை வகைகள், போன்ற உணவுகள் மூலம் புரதச்சத்தை பெறலாம்.

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சி, உட்கொள்வதன் மூலமும் புரதச்சத்தை பெற முடியும்.

Protein powder best uses and effect 2022

புரோட்டின் பவுடர் ஏன் தேவை

Protein powder best uses and effect 2022 இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது புரதச்சத்து உடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து,அசிட்டிக் அமிலம், ஒமேகா-3, போன்ற மற்ற ஊட்டச் சத்துக்களும் கிடைத்துவிடும்.

இது உடல் ஆரோக்கியத்திற்கு இன்னும் வலு சேர்க்கும், ஆனால் புரோட்டீன் ஷேக் அல்லது புரோட்டீன் பவுடரை நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் போது, அதில் உள்ள புரதச் சத்து மட்டுமே கிடைக்கும் ஆனால் மற்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது.

இந்த காரணத்தால் உடலுக்குத் தேவையான மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Protein powder best uses and effect 2022 ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் பாதிப்படையும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பு அதிகரித்து, இதய நோய்கள் வர வழிவகை ஏற்படுத்திவிடும்.

Best lic policy details in tamil 2022

Protein powder best uses and effect 2022 உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வேண்டுமானால் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு, அல்லது அரை லிட்டர் பால்.

200 கிராம் முளைக்கட்டிய பயிறு 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் சத்துமாவு சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும்.

இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் சிறப்பு சட்டங்கள் என்ன..!

உடற்பயிற்சி செய்யும் நபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் மற்றவர்களை விட புரதச் சத்து கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் அதை முறையான மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொண்டால் நன்மை மட்டுமே கிடைக்கும்.

Leave a Comment