Rajinikanth explanation Adityanath falling on his feet
தன்னைவிட 20 வயது குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் நடிகர் விஜயகாந்த் விளக்கம் காரணமே வேற..!
உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அது பற்றி நடிகர் ரஜினிகாந்த் தற்போது புது விளக்கம் ஒன்று அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது அவர் தெரிவிக்கையில்.
ஜெயிலர் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிபெற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், உள்ளிட்டோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்தவர் வயது குறைவானவர்களாக இருந்தாலும் யோகிகள்,சன்னியாசிகள், காலில் விழுவது என்னுடைய பழக்கம்.
உத்திரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு அடிப்படையில் மட்டுமே நான் சந்தித்து பேசினேன் என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் அரசியல் பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார்.
கடந்த வாரம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் அவர் இமயமலைக்கு சென்று அங்கு தியானம் செய்தார்.
அங்கிருந்து ஜார்கண்ட் சென்று அங்கு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக உத்திரபிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு சென்று கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார், அப்போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாதர்த்துடன் அமர்ந்து ஜெயிலர் படம் பார்க்கப் போவதாக தெரிவித்தார்.
ஆனால் ரஜினியுடன் ஜெயிலர் படம் பார்க்க யோகி ஆதித்யநாதர்த் விரும்பவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.
அவருக்கு மாற்றாக உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார்,அவரும் முழு படத்தை பார்க்காமல் அங்கிருந்து பாதியில் கிளம்பினார்.
இந்த நிலையில் படம் பார்த்தபின் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் லக்னாவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு புறப்பட்டார் அவரை வரவேற்று வீட்டு வாசலுக்கு வந்த யோகி ஆதித்யநாத்தை கண்டதும்.
காரில் இருந்து கீழே வேகமாக இறங்கிய ரஜினிகாந்த் ஆதித்யநாதர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தன்னைவிட வயது குறைவானவரின் காலில் விழுவதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது,ஆனால் ரஜினிகாந்த் இதைப் பற்றி எந்த ஒரு கவலை கொள்ளாமல் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Tork Kratos R Gets New Urban Trim Specification..!
விக்ரம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில் பயணிக்கிறது
சிம் கார்டு விற்பனை செய்வதற்கு இனி செக்..!
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மோடி அரசின்..!