ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் 15 ரூபாய் Ramar Pillai says herbal petrol for 15 rupees

Ramar Pillai says herbal petrol for 15 rupees

Ramar Pillai says herbal petrol for 15 rupees  மூலிகை பெட்ரோல் இன்னும் 40 நாளில் ஒரு லிட்டருக்கு 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்று ராமர் பிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, அதாவது 300 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

பெட்ரோல் ஒரு லிட்டர் 102.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதே போல் டீசல் ஒரு லிட்டர் 94.22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட காலமாக விலையில் மாற்றம் இல்லை என்ற போதிலும் இதுவே அதிகமாக உள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

Ramar Pillai says herbal petrol for 15 rupees

ராமர் பிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்தது என்ன..!

Ramar Pillai says herbal petrol for 15 rupees  இப்பொழுது புதிதாக வாகனம் வாங்க தயாராகும் மக்கள் மெல்ல மெல்ல மின்சார வாகன பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள் இந்த சூழலில் வெறும் 15 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைத்தால் எப்படி இருக்கும்.

இதையெல்லாம் உண்மையில் நடக்கிற காரியமா என நீங்கள் யோசிக்கலாம் ஆனால் தன்னால் இந்த விலையிலும் 15 ரூபாய் பெட்ரோல் வழங்க முடியும் என்கிறார் ராமர் பிள்ளை.

மேலும் அது எப்படி என்று விளக்கி உள்ளார் 1990களில் மூலிகை பெட்ரோல் மூலம் தன்னால் மிகக் குறைந்த விலைக்கு பெட்ரோல் தர முடியும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.

இந்த விவகாரத்தில் சிபிஐ கூட இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தது, அதன் பின்னர் சில காலம் அமைதியாக இருந்த இவர் இப்போது மீண்டும் வந்துள்ளார்.

தன்னால் வெறும் 15 ரூபாய் பெட்ரோல் தர முடியும் என இப்போது கூறியுள்ளார்,ராமர்பிள்ளை அவரது சட்ட ஆலோசகர் சொக்குசாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சொக்குசாமி பேசுகையில் கடந்த 2000 ஆண்டு ராமர் பிள்ளை கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் இல்லை வேதிப்பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்று சொல்லி சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தார்கள்.

உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..! Home Business Ideas in Tamil 2023

இது தொடர்பாக வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ராமர் பிள்ளைக்கும் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 5,000/- ரூபாய் அபராதம் விதித்தது.

இதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்தோம் அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம் ராமர் பிள்ளை விடுதலை செய்ய உத்தரவிட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

Ramar Pillai says herbal petrol for 15 rupees

வெறும் 15 ரூபாய்க்கு மூலிகை பெட்ரோல் தயார்

Ramar Pillai says herbal petrol for 15 rupees  மீண்டும் இப்போது விருதுநகர் மாவட்டத்தில் பெரிய மூலிகை பெட்ரோல் மையத்தை தொடங்க உள்ளோம், இதன் மூலம் மூலிகை பெட்ரோலை என்னால் 15 ரூபாய்க்கு வழங்க முடியும்.

விலை மட்டும் இதில் குறைவு இல்லை புகையில்லாமலும் இது இருக்கும் எனது கண்டுபிடிப்பை நான் தொழிலதிபர்களுக்கு நிரூபித்துள்ளேன்.

Top 7 Types of oil used for hair

அவர்கள் தான் இப்போது தொழிற்சாலையை முன்வந்துள்ளார்கள், அடுத்து வரும் 40 நாட்களில் என்னால் இந்த தொழிற்சாலையை தொடங்க உள்ளோம்.

இனிமேல் எனது கண்டுபிடிப்பிற்கு எந்த பிரச்சினையும் வராது 40 நாட்களில் அலையை தொடங்கி 15 ரூபாய்க்கு என்னால் மூலிகை பெட்ரோல் வழங்க முடியும் என்கிறார்.

Leave a Comment