Ravi will soon send neet bill useful tips 2022
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆர்.என்.ரவி முடிவு?வெளியான பரபரப்பு தகவல்.
கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டில் நீட் தேர்வு மூலமாக மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழுவதும் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக குரல் கொடுத்து வருகிறது.
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட.
நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த பிப்ரவரி மாதம் இந்த தீர்மானத்தை மீண்டும் தமிழக சட்டசபைக்கு திருப்பி அனுப்பினார்.
ஆளுநர் ஒப்புதல் இல்லை
இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டப்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் 2வது முறையாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த தீர்மானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
நீட் தேர்வு விலக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நாடாளுமன்றத்திலும், இது தொடர்பாக திமுக தொடர்ந்து அழுத்தம் மற்றும் குரல்களை நீட் தேர்வுக்கு எதிராக கொடுத்து வருகிறது.
தேநீர் விருந்து புறக்கணிப்பு
Ravi will soon send neet ஆளுநர் தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறார், என்று திமுக எம்பிக்கள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
நீட் விளக்கு தீர்மானத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்திலும் அதற்கான குரல்கள் ஒலித்து வருகிறது.
இதற்கிடையே கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் தேனீர் விருந்து அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்தது, மேலும் கூட்டணி கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.
குடியரசு தலைவர்
Ravi will soon send neet இந்த சூழலில் நீட் விளக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக முதல் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் 13ஆம் தேதி 2வது முறையாக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த சட்ட மசோதாவை விரைவில் அவர் குடியரசுத் தலைவருக்கு. அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.