RBI announced new credit rules in tamil 2021

உடனடியாக கடன் வழங்கும் மொபைல் செயலி அங்கீகரிக்கப்பட்டது உண்மையா அதை எப்படி தெரிந்து கொள்வது.( RBI announced new credit rules in tamil 2021)

உடனடியாக கடன் குறைந்த வட்டி குறைந்த ஆவணங்கள் போதும் என்று பல செயல்களிலிருந்து (Applications) தினமும் குறுஞ்செய்தி அனைவருக்கும் 2 முதல் 3  முறை  வரும் இது உண்மையா.

ஒருமுறை நீங்கள் தெரியாமல் அதில் பதிவு செய்து விட்டால் உங்களை தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருக்கும் கடன் கொடுக்கும் பல செயலிகள்.

இந்த செயலிகள் உண்மையிலேயே இந்திய ரிசர்வ் பேங்க் ஆப் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட  என்பதை தெரிந்து கொண்டாள் உங்களது ஆவணங்கள் மற்றும் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி.

ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன் பெற வேண்டும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் அடையாளம் தெரியாத தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்து உங்களுடைய வங்கி கணக்கு விபரங்களைக் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது

மேலும் குறுகிய  காலத்தில் கடன் குறைந்த வட்டி விகிதம் என்று சொல்லும் செயலிகள் மற்றும் இணையதளம் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அவசரத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் பொழுது முழுமையான விபரம் அறியாமல் இணையதளம் அல்லது செயலிகளின் மூலம் கடன் பெற முயற்சிப்பீர்கள் ஆனால் அவைகள்  உண்மையிலேயே இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை பின்பற்றி கடன்களை வழங்குகிறதா என்பதை பற்றி நீங்கள் ஆராய மாட்டீர்கள்.

மேலும் இந்த நிறுவனங்கள் நிமிடங்களில் கடனை உங்களுக்கு கொடுத்துவிடும் பின்பு கொடுத்த கடனை திருப்பிக் கேட்கும் பொழுது பல மடங்கு வட்டி விகிதம் உயர்ந்திருப்பதை  கண்டு நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

இதனை தவிர்ப்பதற்காக ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன்  பதிவு செய்யப்பட்டதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்ய   வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

How to Delete Google Account best tips 2021   உங்களது Google Account யை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலிட் செய்வது அதற்கான ஈஸியான டிப்ஸ். 

கடன் வாங்கும் முன்பே அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

RBI announced new credit rules in tamil 2021

கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு உங்களுடைய KYC  என்னை சரிபார்க்கும் அதுபோலவே நீங்களும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் சட்டரீதியாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் மேலும் அந்த நிறுவனம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

Indian govt Pf new rules 2021 in Tamil

சரியான நிறுவனமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

RBI announced new credit rules in tamil 2021

பல அங்கீகரிக்கப்படாத மோசடி செய்யும் செயலிகள் இணையதளத்தில் உள்ளன மேலும் இணையதளம் இல்லாத செயலிகளை தவிர்த்து விடுங்கள் மற்றும் இணையதளம் இருந்தாலும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அப்படி பதிவு செய்து இருந்தால் அதனுடைய CIN  நம்பரை அடையாளம் காணுங்கள் இதைத் தவிர ரிசர்வ் வங்கியின் பதிவு சான்று விவரங்களை இரு முறைக்கு மேல் படித்துப்பாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

KYC விதிகளைப் பின்பற்றுங்கள்.

கடன் கொடுக்கும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்து இருந்தால் அதன் KYC விதிமுறைகள் ரிசர்வ் வங்கி விதி முறைகளுடன் ஒத்துப் போகிறதா என்பதை சரி பாருங்கள் இது அனைத்தும் சரியாக இருந்தால் கடன் குறைந்த அளவில் பெறுங்கள்  இது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

Leave a Comment