இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி குறைகிறது சமையல் எண்ணெய் விலை(Reduce the price of cooking oil new 2021)
கடந்த 10 மாதங்களாக சமையல் எண்ணெய் விலை உயர்வு என்பது அதிரடியாக அதிகரித்து வந்தது பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி, உள்ளிட்ட 3 சமையல் எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு இப்போது அதிரடியாக குறைந்துள்ளது.
இதன்மூலம் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உடனடியாக குறைக்கப்படுகிறது இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இப்பொழுது இந்தியா இருக்கிறது மொத்த தேவையில் 3ல் 2 பங்கு இறக்குமதியை சார்ந்து இருக்கிறது இந்தியா.
அதாவது இந்தியாவில் கச்சா எண்ணெய், தங்கத்திற்கு, அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படுவது சமையல் எண்ணெய் பொருளாக உள்ளது.
கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் நாட்டில் சமையல் எண்ணெய் தேவை என்பது 24 மில்லியன் டன்னாக இருந்தது இதில் உள்நாட்டு உற்பத்தி மூலமாக மட்டும் கிட்டத்தட்ட 10.6 5 மில்லியன் டன் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது.
ஆனால் மீதமுள்ள 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய்க்கு வெளிநாடுகளில் அதிக அளவில் எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
சுமார் 60 ஆயிரத்து 560 கோடி ரூபாய்க்கு 11.35 மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது வேறு வழி இல்லாமல்.
Solvent Extractors Association of India எனப்படும் (SEA) அமைப்பின் தரவுகளின்படி கடலை எண்ணெய் விலை கடந்த ஆண்டில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது கடுகு எண்ணெய் விலை 50 சதவீதமும் வனஸ்பதி விலை 45 சதவீதமும் சூரியகாந்தி எண்ணெய் விலை பாமாயில் விலை சுமார் 60 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது ஆனால் மலேசியாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வங்கதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக மலேசியாவில் பெருமளவு தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு சென்று விட்டார்கள்.
இதனால் மலேசியாவில் உள்நாட்டு உற்பத்தி என்பது அதிரடியாக குறைந்தது இதனால்பாமாயில் ஏற்றுமதியும் குறைய தொடங்கியது.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது, ஆனால் கடந்த காலங்களில் அந்த நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது எண்ணெய் உற்பத்தி பெரும் பாதிப்பு அடைந்தது இதனால் விலை அதிரடியாக உயர்ந்தது.
இப்பொழுது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது, மற்றொரு பக்கம் தங்கம் விலையும் உயர்கிறது, இப்பொழுது சமையல் எண்ணெய் இதனுடன் சேர்ந்து விட்டதால்.
மக்கள் பெரும் பதட்டம் அடைந்து வருகிறார்கள் இதனை உணர்ந்த மத்திய அரசு இப்பொழுது இதன் மீதான சுங்க வரியை குறைத்துள்ளது.
Click here to view our YouTube channel
கச்சா பாமாயில் இறக்குமதி வரி 10-லிருந்து 2.5% குறைக்கப்பட்டுள்ளது இதுபோல சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி 7.5ல் இருந்து 2.5 யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி வரியை 37.5 இலிருந்து 32.5 ஆக குறைத்துள்ளது தகவலை மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
Best 5 Benefits of eating Beef in tamil
இதனால் வரும் காலங்களில் சமையல் எண்ணெய் மீதான விலை 4 ரூபாய் லிருந்து 5 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் இருந்து தினந்தோறும் அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது.
இதன் காரணம் அதிக அளவில் சமையல் எண்ணெய பதுக்கி வைத்தல் கண்டுபிடிப்பதற்கு.