Registration the land document best 16 tips
பத்திர பதிவு பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 16 விஷயங்கள்..!
பத்திர பதிவு விஷயங்களில் நீங்கள் எப்பொழுதும் கவனமுடன் இருக்க வேண்டும்.
உங்களுடைய நிலத்தை விற்பனை செய்வது அல்லது நீங்கள் நிலம் வாங்குவது தொடர்பான விஷயங்களில் பல்வேறுவகையான முரண்பாடுகள் இருக்கும்.
அனைத்து வகையான சட்ட சிக்கல்களையும் நீங்கள் தெரிந்துகொண்டால், நிலத்தை விற்பனை செய்வது அல்லது நிலம் வாங்குவது அல்லது வேறு ஏதேனும் வாங்குவதற்கு இந்த தகவல்கள் உதவிகரமாக இருக்கும்.
பத்திரம் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஒருவருடைய நிலத்தை விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வதுதான் பத்திரப்பதிவு.
மேற்படி பத்திரப்பதிவு முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவாளர் சாட்சிகள் முன்னிலையில் எழுதப்படுவது தான் பத்திரப்பதிவு ஆகும்.
எழுதிக் கொடுப்பவரின் பெயரும் அவருடைய இன்சியலும், அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, இதற்குமுன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுத்தப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரியாக பார்க்க வேண்டும்.
எழுதி கொடுக்கும் நபர் ஏற்கனவே அதற்கு முன் வாங்கிய கிரைய பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும்.
தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகின்ற கிரைய பத்திரத்தில் கட்டாயம் எழுத வேண்டும்.
கிராயம் எழுதி வாங்கும் நபர் தன்னுடைய பெயர், இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன், சரியாக பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
கிராயம் எழுதிக் கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது.
அவர் வேறு நபரிடம் கிராயம் வாங்கியிருக்கலாம் அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இரண்டு செட்டில்மெண்ட் பாகப்பிரிவினை விடுதலை பத்திரம் மூலம் அடைந்திருக்கலாம்.
கிராயம் எழுதிக் கொடுப்பவர் யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டுமில்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்று அவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று அனைத்து விவரங்களையும் சரியாக பார்க்க வேண்டும்.
கிராயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள், வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள்.
எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் காட்டப்பட்டது.
எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
கிராயம் எழுதி கொடுப்பவரும் எழுதி வாங்குபவரும் கீழ்கண்ட உறுதிமொழிகளை கட்டாயம் கொடுத்திருக்க வேண்டும்.
தானம்
அடமானம்
முன் கிரையம்
முன் அகிரீமெண்ட்
உயில்
செட்டில்மெண்ட்
கோர்ட் அல்லது கொலட்ரால் செக்யூரிட்டி
ரெவின்யூ அட்டாச்மென்ட்
வாரிசு பின்தொடர்
மைனர் வியாஜ்ஜியங்கள்
பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பார்த்திய கோரல்கள்
சொத்து ஜப்தி
சொத்து ஜாமீன்
சர்க்கார் கடன்கள்
வங்கி கடன்கள்
தனியார் கடன்கள்
சொத்து சம்பந்தமான வாரிசு உரிமை
சிவில் கிரிமினல் வழக்குகள்
சர்க்கார் நில ஆர்ஜிதம்
நிலகட்டுப்பாடு
அரசு நில எடுப்பு முன்மொழிவு நோட்டீஸ்
நில உச்சவரம்பு கட்டுப்பாடு
பத்திர பதிவு சட்டம் (47 (a ) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
இதில் செல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதிமொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரி வகைகள் முழுவதும் சரியான நேரத்தில் சரியான தொகை செலுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக் கொடுக்கச் சொன்னால்.
கைமாறு எதிர்பார்க்காமல் எழுதிக் கொடுக்கிறேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
சொத்து விவகாரத்தில் மிகத்தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம், புல எண் உட்பட அனைத்தையும் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
வீதி எண், கதவு எண், இருந்தால் நிச்சயம் எழுத வேண்டும் மின் இணைப்பு இருந்தால்.
நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், புல எண் தெளிவாக அனைத்தையும் எழுதி இருக்க வேண்டும்.
இடத்தின் அளவு நாட்டு வழக்கம் முறையிலும், பிரிட்டிஷ் அளவு முறையையும், மெட்ரிக் அளவு முறையும், தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும்.
Registration the land document best 16 tips மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு எப்பொழுதும் உதவியாக இருக்கும்.
பத்திரப்பதிவில் சொத்தை சுற்றியிருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை பற்றி தெளிவாக எழுத வேண்டும், நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள, அகல, அளவுகளை தெளிவுடன் குறிப்பிட வேண்டும்.
Registration the land document best 16 tips பத்திரத்தில் எல்லா பக்கங்களிலும் எழுதிக் கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும்.
எழுதிக் கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள் பெயர் முகவரியுடன் கையொப்பமிட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
Registration the land document best 16 tips தேவையான பட்டா வரைபடம், அடையாள அட்டை நகல்கள், பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதிக் கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
முத்திரை தாள்கள் சரியானதா என்று சோதிக்க வேண்டும்.
பத்திரப்பதிவு கட்டணம் DD சரியாக எடுத்துள்ளார்களா அல்லது வழக்கறிஞர் ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பமிட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.