Rent per electricity meter tn useful tips 2022
செப்டம்பரில் இருந்து வீடுகளில் மின்சார மீட்டருக்கு மாதம் ரூபாய் 60 வாடகை விதிக்க புதிய திட்டம்..!
தமிழக மின்சார வாரியம் இப்பொழுது கடுமையான பொருளாதார சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
மின் கட்டணம் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
முதன் முறையாக தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, அதுமட்டுமில்லாமல் இப்பொழுது திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் பாஜகவும் போராட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மின்சார வாரியம் மின் நுகர்வோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் மீட்டர்களுக்கு வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
இதுவரையில் மின் மீட்டர் டெபாசிட் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது, தற்போது அதற்கும் மாத வாடகையாக ரூபாய் 60 வீதம் இரண்டு மாதத்திற்கு ரூபாய் 120 வசூலிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டருக்கு இந்த வாடகை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் எதிர்காலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது இந்த வாடகையை ரூபாய் 350 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார்
மின் மீட்டரை பொதுமக்கள் வாங்கித்தரும் பட்ஜெட்டில் வாடகை கட்டணம் செலுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம், இது தொடர்பாக கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக மின் பகிர்மானம் விதி கூறுகிறது.
Rent per electricity meter tn useful tips 2022 மேலும் மின் மீட்டர் இடம் மாற்றம் அல்லது மாற்றம் செய்வதற்கு 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்டர் போர்டு சிங்கிள் பேஸ் இடமாற்றம் செய்வதற்கு ரூபாய் 500, 3பேஸ் இணைப்பிற்கு ரூபாய் 750 நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை மேலும் உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
Rent per electricity meter tn useful tips 2022 இதற்கான புதிய கட்டணமாக ரூபாய் 1000 மற்றும் 1500 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்த அளவு டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் செலவின கட்டணம் ரூபாய் 1000 முதல் 2000 வரை கூட உயர வாய்ப்புள்ளது, உயரழுத்த டிரான்ஸ்பார்மர் ரூபாய் 2000 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த வசூலிக்கப்படுகிறது.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சார கட்டணம் அல்லாத வருவாய் 2021-2022 ஆண்டில் 1,730 கோடியாக இருந்தது இதனை 1,793.45 நடப்பாண்டில் கோடியாக அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டம் மூலம் பொதுமக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
Rent per electricity meter tn useful tips 2022 விடியல் ஆட்சி என்று சொல்லி அனைத்து துறைகளிலும் ஊழல் கொடி கட்டி பறக்கிறது.
அனைத்து துறைகளிலும் கட்டணங்கள் உயர்கிறது, மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள்.