ராபர்ட் கியோசாகி கூறும் 10 அடிப்படை பணத்திற்கான விதிகள்.(Robert Kiyosaki best 10 tips for money)
ராபர்ட் கியோசாகி உலகில் உள்ள மக்களுக்கு நிதி சம்பந்தமான புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தினார் இவருடைய பணக்கார அப்பா ஏழை அப்பா (Rich Dad Poor Dad) என்ற புத்தகம் 2001ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை உலகில் விற்பனையான முதல் 10 புத்தகங்களில் 4 இடத்தைப் பிடித்தது.
உங்களுடைய நிதிக்காக அரசாங்கம், நிதி ஆலோசகர், உங்கள் முதலாளி, நண்பர்கள், மற்றும் உறவினர்கள் யாரையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று தெரிவிக்கிறார்.
உங்கள் பணத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் நீங்கள் நிதி சம்பந்தமான உங்களுடைய அறிவு கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும் மேலும் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய நிதி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.
ராபர்ட் கியோசாகி அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக மற்றும் ஜெராக்ஸ் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றினார். மேலும் தனது உண்மையான ஆர்வம் கற்பித்தல் என்று கூறியுள்ளார்.
ராபர்ட் கியோசகி கூறும் பணத்திற்கான 10 விதிகள்.
1) உங்கள் வணிகத்தைப் சரியாக வடிவமைக்கவும்.

நீங்கள் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவதற்கு உங்களுடைய நேரடி ஈடுபாடு இல்லாமல் உங்களுடைய கணினிகள் அல்லது வேலையாட்கள் இயங்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுடைய வணிகம் லாபகரமாக இயங்குவதற்கு உங்களுடைய இருப்பை பொறுத்து இருக்கக்கூடாது. நீங்கள் உறங்கும்போது கூட உங்களுடைய வணிகம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
2) நீங்கள் எதற்காக வேலை செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கையில் குறைந்த நேரங்கள் மட்டுமே உள்ளது அதனால் உங்களுக்கு வருமானம் தரக்கூடிய செயல்களில் உங்களுடைய முயற்சி மற்றும் நேரத்தை முதலீடு செய்யவேண்டும்.
தனது வருவாயில் பெரும்பாலும் நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்வதன் மூலம் தனக்கு நல்ல மற்றும் நிலையான வருமானம் இருப்பதை அவர் உறுதி செய்தார்.
3) இழப்புகளுக்கு பயப்பட வேண்டாம்.
நீங்கள் வெற்றி பெற விரும்பினால் முதலில் தோல்வி குறித்து நீங்கள் செய்யும் முயற்சிகளில் இருந்து பின் வாங்க கூடாது.
நமது பள்ளிகளில் தோல்வி குறித்து மோசமான கருத்துகள் பல காலமாக கற்பிக்கப்படுகிறது ஆனால் உலகில் இன்று பெரிய நிறுவனங்களை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த நபர்கள் முதலில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமே.
மேலும் அவர்கள் தங்களுடைய கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காத நபர்கள்
4) சொத்துகளை சேர்ப்பதற்கு இலக்குகளை உறுதி செய்யுங்கள்.
உங்களுடைய வணிகத்தில் நீங்கள் வெற்றி கண்டதும் உங்களுக்கு வருமானம் வர தொடங்கும். அப்பொழுது நீங்கள் பன்முகத் தன்மையுடன் பல்வேறு முயற்சிகளில் உங்கள் வணிகத்தை விரிவு செய்வதற்கு உங்கள் நேரம் மற்றும் உழைப்பை முதலீடு செய்யவேண்டும்.
இது உங்கள் வணிகத்தை அளவிடவும் பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.
5) பணத்தை சேமிப்பது நிறுத்துங்கள் முதலீடு செய்வதை தொடங்குங்கள்.
பணத்தை சேமிப்பது நிறுத்துங்கள் பணத்தின் மதிப்பும் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையும். அதனால் நீங்கள் முதலீடு செய்ய தொடங்குங்கள் உங்களுடைய முதலீட்டின் மதிப்பு நாட்கள் செல்லச் செல்ல உயரத் தொடங்கும்.
6) வாழ்க்கையில் கடினமான நேரங்கள் புதிய வாய்ப்புகளைத் தருகிறது.
உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கடினமான நேரங்கள் உங்களின் உண்மையான திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு உதவுகிறது.
இதனால் உங்களுக்கு மிகப் பெரிய மன அழுத்தங்கள் ஏற்படலாம் இது உங்களுக்கு புதிய வேலையை தொடங்குவதற்கு வழிவகை செய்யும்.
7) கவனம் செலுத்துங்கள்.
புதிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு இப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இதில் நீங்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பல விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஒரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
8) நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றுங்கள்.
உங்களுடைய மிகப்பெரிய வெற்றிக்கு இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நிகழும் சில மோசமான நிகழ்வுகளை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும்.
மேலும் உங்களுடைய மோசமான சூழ்நிலைகளை சிறந்ததாக தேர்ந்தெடுப்பது சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகிறது.
9) நீங்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக பெறுவீர்கள்.
இப்பொழுது நீங்கள் உங்களுடைய வெற்றிக்கு உங்களுடைய நேரம் மற்றும் பணத்தை முதலீடு செய்து கொண்டிருப்பீர்கள் அது ஒரு நாள் கண்டிப்பாக உங்களுக்கு வந்து அடையும்.
இல்லையென்றால் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் செயல்களின் மதிப்புகளை மறு ஆய்வு செய்யுங்கள்.
நிக்கோலா டெஸ்லா கண்டுபிடிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு தமிழில்.
10) அனுபவம் உங்களுக்கு சிறந்த பாடத்தை கொடுக்கிறது.
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் தொழிலில் அனுபவம் பெற்றுள்ளீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள்.
Niccolo Tesla’s Best Discoveries in tamil 2021
உங்களுடைய தற்போதைய தோல்வி உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Telegram group | Click Hear |
YouTube | Click Hear |