Russia vs Ukraine war the effect in India 2022
உக்ரைன் மீது ரஷ்யா போர் இந்தியாவில் விலை உயர வாய்ப்பு உள்ள பொருட்கள் என்ன..!
ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு, உள்ளிட்ட விலை உயரும் என தெரிகிறது.
நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறது, இதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது, உக்ரைனுக்கு ஆதரவாக ஜப்பான், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகள் இருக்கிறது.
இந்தநிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவ படைகளை அதிகளவில் குவித்து வந்தது அங்கு இராணுவப் பயிற்சியும் நடை பெற்றதாக அறிவித்தது.
பீரங்கிகள் ஆயுதங்களை உக்ரைன் எல்லையில் குவித்ததால் ஐநா சபை, அமெரிக்க, உள்ளிட்டவை ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
போர் தொடுத்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை இருந்தது, ஆனால் அதை பொருட்படுத்தாமல் ரஷ்ய ராணுவ படைகளை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் திடீரென்று உக்ரைனில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் ஏன்
வியாழக்கிழமை காலை திடீரென்று ஒரு அதிரடி உத்தரவை ரஷ்ய அதிபர் பிறப்பித்தார், அதன்படி ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதற்கு அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், உள்ளிட்டவை கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
இந்தியாவில் என்ன பாதிப்பு ஏற்படும்
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால் இந்தியாவில் சில பொருட்களின் விலை அதிகமாக உயரம் என தெரிகிறது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகமாக கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் ஒன்றுக்கு 103 டாலரைத் தாண்டியுள்ளது.
உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக எப்பொழுதும் ரசியா திகழ்ந்து வருகிறது.
கச்சா எண்ணெயின் விலை உயர்வு உலக ஜிடிபியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், பெட்ரோல் விலை பேரலுக்கு 150 டாலர்களாக உயர வாய்ப்பு இருக்கிறது.
உலக ஜிடிபி வளர்ச்சி 0.9 சதவீதமாக குறையும் அபாயம் இருக்கிறது, அதுபோல் இயற்கை வாயுக்களின் விலை அதிரடியாக உயரும், சமையல் எரிவாயு விலையும் பலமடங்கு அதிகரிக்கும்.
பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயரும்
கடந்த காலங்களில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.
இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் 25% எண்ணெய் பொருட்கள் உள்ளன,80 சதவீதத்திற்கு மேல் இயற்கை எரிவாயு தேவைகளுக்காக இந்தியா உலக நாடுகளை சார்ந்துள்ளது.
உணவு பொருட்களின் விலை உயரும்
கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்கள் வருவதில் தடை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது, இதனால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன..!
உலகின் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா எப்போதும் முன்னணியில் இருக்கிறது, அதேபோல் உக்ரைன் நாடும் கோதுமை உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது.
ukraine vs russia new war started in 2022.
இதனால் கோதுமை ஏற்றுமதி என்பது இரண்டு நாடுகளிலும் கடுமையாக பாதிக்கப்படும், இவையெல்லாம் அதிரடியாக உயர அதிக வாய்ப்புகள் இருக்கிறது.