சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு செய்தி 2020(Salem district employment news2020 quick apply)
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தொடர்ந்து அறிவிப்புகளை மாவட்டம் தோறும் பல்வேறு தேதிகளில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் வகையில் சேலம் மாவட்டத்தில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மொத்த காலி பணியிடங்கள் 53. 5/11/2020 முதல் 10/12/2020 வரை தபால் மூலம் அல்லது நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கலாம். இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பள விவரங்கள், வயது விவரங்கள், தேர்வு செய்யும் முறை, போன்றவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் மூலம் காணலாம்.
நிர்வாகம் : சேலம் மாவட்டம்
மேலாண்மை : தமிழ்நாடு அரசு
தொடக்க தேதி : 5/11/2020
இறுதி தேதி : 10/12/2020
வேலை விவரம் : இளநிலை வரை தொழில் அலுவலர்
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் அல்லது நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கலாம்.
ஊதிய விவரங்கள் : 35,400
மொத்த காலி பணியிடங்கள் : 53
வயது வரம்பு.
ஜூலை மாதம் 1- ம் தேதி அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கல்வித்தகுதி.
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ (Diploma in Civil Engineering) முடித்திருக்க வேண்டும் மேலும் இதற்கான கல்வியினை முழு நேரம் அல்லது பகுதி நேர படிப்பு முறையில் முடித்திருக்க வேண்டும்.( Full-time or part-time study.) தொலைதூர கல்வி முறை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது (Distance education will not be accepted.)
ஊதியம்.
35,400 – 112,400 என்ற ஊதி அட்டவணையில் அரசு நிர்ணயிக்கும் படிகளில்.
தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
நேர்காணல் முறை
ஆவணங்கள் சரிபார்ப்பு
பதவியின் பெயர் / பணியின் தன்மை.
இளநிலை வரை தொழில் அலுவலர், பணி பார்வையாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்டப் பணிகளையும் மேற்பார்வையிடுதல்.
விண்ணப்பிக்கும் முறை.
தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை முழுவதும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
காலம் கடந்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசு விதிமுறைகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
Best investment plan India 2020
முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், அடையாள அட்டை, ஆதார் கார்டு, போன்ற நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியாளர் நேர்முக உதவியாளர் வளர்ச்சி பிரிவுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி அறை எண் 210, 2வது தளம் மாவட்ட ஆட்சியரகம் சேலம் 636 001 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் 10/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் நாள் தேதி குறித்து அழைப்பிதழ் கடிதம் அனுப்பப்படும்.