Salman Meen amazing health benefits list 2022
உடலுக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடிய சால்மன் மீன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் சால்மன் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம்.
அதோடு சால்மன் மீனில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
நம் உணவில் சால்மன் மீன் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு, தோல் சம்பந்தமான பிரச்சினை, மூட்டு வலி, போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகள் சரிசெய்யலாம்.
சால்மன் மீனில் அதிக அளவில் வைட்டமின் ஊட்டச்சத்து, தாதுக்கள் மற்றும் முக்கியமான ஒமேகா-3 என்ற சொல்லக்கூடிய கொழுப்புச் சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
சால்மன் மீன் அதிகமான எண்ணெய்ப்பசை கூடியது, இதனால் சால்மன் மீனை அடுப்பில் சுட்டு அல்லது அதிக அழுத்தத்தில் நீராவியில் வேகவைத்த, நீரில் கொதிக்க வைத்து, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
இப்பொழுது சால்மன் மீன் சாப்பிடுவதால் என்ன வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், என்ன விதமான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கலாம், என்பதை விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
நீரிழிவு நோயிலிருந்து தப்பிப்பதற்கு
கடல் உணவுகளில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு நிறைந்த ஊட்டச்சத்து அமிலம் மனித உடலுக்கு மிகவும் தேவைப்படுகிறது.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமே அந்த ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமானது கிடைக்கும் சால்மன் மீனில் எண்ணெய் பதம் அதிகமாக இருப்பதால்.
இயற்கையாகவே அதில் ஒமேகா-3 கொழுப்பு ஊட்டச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.
உடல் எடை கட்டுப்படுத்த
மீன்களில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்து உள்ளதால் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது இதில் உள்ள ஊட்டச்சத்துகள்.
அதிக உடல் எடையினால் அவதிப்படும் நபர்கள் புரதம் நிறைந்த சால்மன் மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம், இதனால் உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சால்மன் மீனில் சிறு சிறு பயோ ஆக்டிவ் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்து மூலக்கூறுகள் அதிகமாக உள்ளன, அவை எலும்புகள் மூட்டில் உள்ள குருத்தெலும்புகளுக்கு.
இன்சுலின் செயல்திறன் மற்றும் செரிமான தடத்தில் வீக்கம் போன்றவற்றை வராமல் தடுப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது.
ஒமேகா-3 ஊட்டச்சத்து சால்மன் மீன்
ஒமேக 3 ஊட்டச்சத்து கொழுப்பு அமிலத்திணை சேர்ந்ததாகும், ஒமேகா கொழுப்பு அமிலம் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று.
ஒமேக 3 என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் மீனை சாப்பிடுவதால் மூட்டு வலி, தோல் சம்பந்தமான பிரச்சனைகள், இதய நோய்,போன்றவை வருவதை தடுத்து விடலாம்.
மேலும் உயர் ரத்த அழுத்தம், அதிகமான கொழுப்புகள், மன அழுத்தம் பிரச்சினைகள், மூளை சம்பந்தமான நோய்கள் மற்றும் புற்று நோய்களில் இருந்து விடுபட்டு விடலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சால்மன் மீன் நன்மைகள்
சால்மன் மீனில் அதிகமாக பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது, பழ வகைகளில் வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.
ஆனால் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட 10 சதவீதம் கூடுதலாக சால்மன் மீனில் அதிக அளவில் பொட்டாசியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
பொட்டாசியம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் குறிப்பாக உங்களுடைய உடலில் உபரிநீர் சேராமல் தடுக்கும்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற 6 சிறந்த திட்டங்கள்
பாஸ்பரஸ் என்ற ஊட்டச்சத்து எலும்பு மற்றும் பற்கள் பகுதியை நல்ல வலிமையாக வைத்திருக்கும், மேலும் இதய நோய்கள், தைராய்டு, புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
Best 6 insurance plans you must take
தாதுக்கள் குறைந்த அளவில் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் மூலம் புற்றுநோய் உண்டாவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.