Samosa making business profit full details2021
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நமது இணையதள பதிவில் குறைந்த முதலீட்டில் தினசரி லாபம் கொடுக்கக்கூடிய தொழிலை பற்றி பார்க்க போகிறோம்.
இந்தத் தொழிலுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் சமோசா தயாரிப்பு தொழிலை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலை ஆரம்பித்து எளிதாக மாதம் 30,000 முதல் 40,000 வரை உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
இதற்கு முன் தொழில் வியாபாரிகள் இந்த தொழிலை மிஷின் முறையில் இல்லாமல் கைகளால் சமோசா தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வந்து இருப்பார்கள் இப்பொழுது சிலர் அதை பின்பற்றுகிறார்கள்.
இந்த தொழிலை எளிமையாக மற்றும் விரைவாக செய்ய இப்பொழுது மிஷின் வந்து விட்டது, இந்த சமோசா தொழிலை மிஷின் மூலம் செய்து தொழில் எப்படி சுலபமாக அதிக லாபம் தினமும் பெற முடியும் என்பதைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தொழில் தொடங்க தேவையான இடவசதி
சமோசா தயாரிப்பு தொழிலை நீங்கள் வீட்டிலிருந்து கூட எளிமையாக தொடங்கலாம் அதற்கு வீட்டின் சிறிய அறை போதுமானதாக இருக்கிறது.
மிஷின் வைப்பதற்கு, மூலப்பொருட்கள் வைப்பதற்கு, தயாரித்த சமோசாவை வைப்பதற்கு, என இடங்கள் தேவைப்படும் உங்களுக்கு தேவையான இடத்தினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
மூலப்பொருட்கள்
இந்த தொழிலை கைகளாலும் செய்யலாம் அல்லது மெஷின் மூலம் செய்யலாம் நீங்கள் மெஷின் பயன்படுத்தி இந்த தொழிலை செய்தால் அதிகமான சமோசாவை தயாரிக்க முடியும் அதுமட்டுமில்லாமல் வேலையாட்கள் குறைவாக இருந்தால் போதும்.
உங்களுக்கு சமோசா தயாரிப்பு மெஷின் அவசியம் அடுத்ததாக இந்த தொழிலுக்கு ஏற்ப மூலப்பொருளான மைதா மாவு, தேவையான காய்கறிகள், போன்றவை தேவைப்படும் மூலப் பொருட்களாக இருக்கிறது.
இயந்திரத்தை பற்றிய முழு விவரம்
இந்த சமோசா தயாரிப்பு தொழில் தொடங்க தேவைப்படும் இயந்திரம் இதுதான் இந்த இயந்திரமானது அனைத்து இணையதள ஷாப்பிங்கிலும் கிடைக்கிறது.
உங்களுக்கு இந்த இயந்திரத்தை நேரில் பார்த்து வாங்க வேண்டும் என்றால் நீங்கள் கோயம்புத்தூரில் இதற்கான இயந்திரத்தை வாங்க முடியும் அங்கு சமையலுக்கு தேவையான அனைத்து வகையான இயந்திர உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளது.
நீங்கள் இணையத்தில் தேடினால் அனைத்து விவரங்களும் எளிதாக கிடைத்துவிடும், இந்த இயந்திரத்தின் ஆரம்பமானது 50,000/- முதல் இணையதளத்தில் கிடைக்கிறது. தங்களுக்கு பிடித்த வகையில் உள்ள மெஷினை வாங்கி நீங்கள் இந்த தொழிலை ஆரம்பித்து கொள்ளலாம்.
இயந்திரத்தில் சமோசா எப்படி தயாரிப்பது
சமோசா தயாரிப்பு தொழில் தொடங்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்தாள் சமோசா ரெடி செய்வதற்கான அந்த மசாலாவை தயாரித்து இயந்திரத்தில் புனல் வடிவில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும்.
அடுத்து மைதா மாவினை அதன் அருகிலுள்ள மெஷின் பார்ட்டில் சேர்க்க வேண்டும் நீங்கள் கையினால் சமோசா தேய்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை மெஷினில் மாவினை சேர்த்துவிட்டால் போதும்.
மிஷின் ஆனது உள்ளே செலுத்திய மாவினை சமோசா வடிவில் தயாரித்து கொடுத்து விடும் அதன் பிறகு எண்ணெயில் பொரித்து சமோசாவை நீங்கள் விற்பனை செய்யலாம்.
இந்த சமோசா தயாரிப்பு இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 2000 வரையில் சமோசாவை நீங்கள் தயாரிக்கலாம் குறிப்பாக மெஷின் திறனுக்கு ஏற்ப இது மாறுபடும் என்பதை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமில்லாமல் சமோசா தயார் செய்வதற்கு பொதுவாக இரண்டு நபர்கள் தேவைப்படும் மடிப்பதற்கு மற்றும் மடித்தவற்றில் மசாலாவினை வைப்பதற்கு தேவைப்படுவார்கள்.
அந்த வேலைகளை குறைப்பதற்கு புதிய முறையில் மிஷின் வந்து விட்டது சுலபமாக உங்களுடைய வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம்.
சமோசா தயாரிப்பு சந்தை விவரங்கள்
இந்த சமோசா தயாரிப்பு தொழிலுக்கு வருடம் முழுவதும் நல்ல மார்க்கெட்டிங் இருக்கிறது நீங்கள் சமோசா தயாரிப்பு தொழிலை கைகளால் மேற்கொள்ளாமல் மெஷின் மூலம் செய்து வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் மற்றும் அதிக லாபம் பெற முடியும்.
நீங்கள் மெஷின் மூலம் செய்வதால் அதிக விற்பனை செய்யலாம் இதற்கு டீக்கடைகளில், ரயில்வே நிலையங்கள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள், நடைபாதைகள், பூங்காக்கள், மக்கள் கூடும், இடங்களில் நீங்கள் இந்த தொழிலை செய்தால் கட்டாயம் உங்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும்.
இந்தத் தொழிலில் தினமும் லாபம் இருந்துகொண்டே இருக்கும் அனைத்து காலங்களிலும் செய்யக்கூடிய முதன்மையான தொழிலாக இருக்கிறது, சமோசா தயாரிப்பு மெஷினை வாங்கி சுலபமாக நீங்கள் தொழில் தொடங்கி விடலாம்.
இப்பொழுது ஒரு சமோசாவின் விலை குறைந்தபட்சம் 10 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 30 ரூபாய் வரை இருக்கிறது கடைகளின் தன்மைக்கேற்ப, நீங்கள் தயாரிக்கும் சமோசாவிற்க்கு நீங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் உங்களுடைய முதலீட்டை பொருத்து.
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்
இந்த தொழிலில் நீங்கள் அதிகமாக பணம் செலவழிப்பது சமையல் எண்ணெய்க்கு மட்டுமே இதனுடைய விலை என்பது இப்பொழுது 200 ரூபாயை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
Click here to view our YouTube channel
நீங்கள் சமையல் எண்ணெய் மொத்தமாக அதிக அளவில் ஒரே இடத்தில் கொள்முதல் செய்தால் விலை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
Homeopathy treatment history and benefits 2021
அல்லது வேர்க்கடலை வாங்கி நீங்கள் எண்ணெய் உற்பத்தி செய்து இந்த தொழிலை தொடங்கினால் உங்களுக்கு முதலீட்டில் கணிசமான அளவு பணம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.