அரசு மானியத்துடன் எளிதாக கோழி பண்ணை அமைக்கலாம் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.!!!(SBI agriculture loan details new 2020)
இந்தியாவில் இளைஞர்களிடம் தொழில் துறையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.ஒரு தொழில் சிறப்பாக வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கு வழி காட்டுதல் வேண்டும்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே மாவட்டம் தோறும் தொழில் பயிற்சி மையத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது.
அதிலும் வேளாண் சார்ந்த தொழில் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறது. தொழிலுக்கு வழிகாட்டுதல், மானியத்துடன் கடன் வழங்குதல், இலவச மின்சாரம், சந்தை படுத்துதல் போன்ற பல்வேறு வசதிகளை தொழில் துறையினருக்கு மத்திய மாநில அரசுகள் செய்து கொடுக்கிறது.
இயற்கை சார்ந்த உணவு பொருட்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக மக்களிடம் இயற்கை சார்ந்த உணவு பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதில் சிறந்த முதலீட்டு திட்டங்கள் ஆக இந்த தொழில்கள் மாறியுள்ளன. காளான் வளர்ப்பு ,நாட்டுக்கோழி பண்ணை, மொட்டை மாடியில் தோட்டம், இயற்கை உரம் தயாரித்தல், தேன், இறால் வளர்ப்பு, காடை வளர்ப்பு, போன்ற துறைகளில் அதிக வருவாய் கிடைக்கிறது.
கோழி பண்ணை அமைக்க அரசு வழங்கும் மானியங்கள்.
எல்லா தொழில்களுக்கு முதலீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களை மத்திய, மாநில அரசுகள் என்றும் கைவிட்டதில்லை. அவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குதல் வழிகாட்டுதல் போன்றவற்றை செய்கிறது. அதன் வகையில் குறைந்த முதலீட்டில் நீங்கள் எளிதாக கோழி பண்ணை அமைக்கலாம் இதற்கு நபார்டு வங்கி NABARD BANK 25 சதவீதம் மானியம் வழங்குகிறது. மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 33.33 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்குகிறது.
கோழி பண்ணை அமைப்பதற்கு முன் ஏற்பாடு செய்தல்.
கோழி வளர்ப்பு அல்லது கோழி பண்ணை அமைக்க நீங்கள் விரும்பினால் அதற்கு முதலில் நீங்கள் நல்ல ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.அந்த இடம் உங்கள் கோழிப்பண்ணைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.
தண்ணீர், தீவனங்கள், போக்குவரத்து வசதி, சூரிய ஒளி, சுத்தமான காற்று ஆகியவைகள் கிடைக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.
அதற்குப் பின்பு முதலீட்டுக்கான பணத்தை நீங்கள் ஏற்பாடு செய்தாள் இந்திய அரசு வழிகாட்டுதலின்படி சில வங்கிகள் கடனுதவி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடன் வழங்கும் வங்கிகளின் விவரங்கள்.
State Bank of India
HDFC Bank
PNB Bank
IDBI Bank
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பிராய்லர் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழிப்பண்ணை அமைக்க கடன் வழங்குகிறது. இதில் தீவனம் வாங்குதல் கொட்டகை அமைத்தல் என அனைத்திற்கும் கடன் வழங்குகிறது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா https://www.sbi.co.in/web/agri-rural/agriculture-banking/allied-activities/poultry-loan என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள முழு விவரங்களையும் நீங்கள் காணலாம்.
நீங்கள் கோழி பண்ணை அமைக்கும் நிலத்தினை வங்கிகள் அடமானம் வைத்து கடன் உங்களுக்கு வழங்கும். நிலத்தின் மதிப்பில் சுமார் 50 சதவீதம்.
எவ்வளவு தொகை கடன் பெற முடியும்.
வங்கிகள் இப்பொழுது உங்களுடைய முதலீட்டில் 75% கடனாக வழங்குகிறது எஸ்பிஐ இப்பொழுது ஆண்டுக்கு 10.6 சதவீதம் விகிதத்தில் கடன் வழங்குகிறது.
Canara Bank Recruitment 2020 Amazing JobOffers
கோழிப் பண்ணைத் தொழிலை பொறுத்தவரை பயிற்சி அல்லது முன் அனுபவம் அல்லது கொட்டகை கட்டுவதற்கு போதுமான நிலம் உள்ளவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.
கடன்கள் பெறுவதற்கு வங்கிகள் கேட்கும் மூன்று முக்கிய ஆவணங்கள்.
வங்கிகள் வழங்கும் விண்ணப்பத்தினை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்.
அடையாள அட்டை வேண்டும்.வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை.
முகவரி சான்றுக்கு தேவையான ஆவணங்கள். வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை.
கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி.
எஸ்பிஐ 5 ஆண்டுகள் கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் வழங்குகிறது இருப்பினும் இந்த காலகட்டத்தில் உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாவிட்டால் மேலும் 6 மாதங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கிறது.twitter