தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(scholarship for unemployment in tn 2021 new)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் பல லட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய பழைய வேலையை இழந்து விட்டார்கள்
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் புதிய வேலை தேடுவது மற்றும் புதிய தொழில் செய்ய ஆரம்பிப்பது என்பது ஒரு இயலாத காரியமாகவே உள்ளது ஏனென்றால் அடுத்தது கொரோனா வைரஸ்ஸின் மூன்றாவது அலை வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால்
எந்த ஒரு தொழிலிலும் மற்றும் வேலை செய்ய முடியாத சூழ்நிலை கடந்த 18 மாதங்களாக நிலவுகிறது இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில்
ஆண்டுதோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதி பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் சிறிய அளவில் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது
தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை விவரங்கள்
இந்த திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு கல்வி தகுதியை மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூ 200 வழங்கப்படுகிறது
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ரூ 300 வழங்கப்படுகிறது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ரூ 400 எனவும் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் முடித்த இளைஞர்களுக்கு ரூ 600 எனவும் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு செய்து இருந்தால் போதுமானதாக இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை மற்றும் சட்டம் போன்ற தொழில் கல்வி படித்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில்லை
இந்த உதவித்தொகை பெற தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இப்பொழுது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
5 Special Tips for Getting Beautiful Skin
இளைஞர்கள் இந்த விண்ணப்பத்துடன் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்