தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு எப்போது புதிய அரசு எடுக்கப்படும் முடிவுகள் என்ன.(School reopen in tamilnadu 2021 Full Details)
பள்ளிகள் திறப்பது எப்போது இந்த வருடம் புதிய அரசு எத்தகைய முடிவுகளை எடுக்கும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு திறம்பட நேரடியாக வகுப்புகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் 2 அலை புதிய உச்சத்தை அடைந்து வருவதால் இணையதள வகுப்புகள் மற்றும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.
பள்ளி கல்லூரிகள் திறப்பு?

கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவினால் அனைத்துப் பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்டது. இதற்கு பின்பு கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் குறையத் தொடங்கியது இதனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியான வகுப்புகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது 2 அலை புதிய உச்சத்தை அடைந்து வருவதால் மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணையதளம், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸப் என பல்வேறு வழிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டது ஆனால் இவ்வாறான இணையதள வகுப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு பெரிய அளவில் ஆர்வம் ஏற்படவில்லை இதனால் அவர்களுடைய கற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். மேலும் 9 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டது கொரோனா வைரஸ்ன் 2 அலை தீவிரமாக இருப்பதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

இப்பொழுது தனியார் பள்ளிகளின் சார்பில் தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.மேலும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை 100% உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பிள்ளைகளை அனுப்ப முடியும் என சில பெற்றோர்கள் கூறியுள்ளார்கள்.
எச்சரிக்கை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது புதிய அரசுக்கு எழுந்துள்ள மிகப் பெரிய சிக்கல் எப்படி 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமா மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான மதிப்பீடு விபரங்களை அளிப்பது அடுத்த கல்வியாண்டில் பள்ளி திறப்பது என பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது இதை எப்படி திரு மு க ஸ்டாலின் அரசு கையாளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.