SCSS Saving Scheme Benefits in Tamil 2020

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் நன்மைகள் தமிழில் 2020(SCSS Saving Scheme Benefits in Tamil 2020)

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறையில் அமல்படுத்தியுள்ளது மூத்த குடிமக்களை பாதுகாக்க மற்றும் அவர்களுடைய பொருளாதாரம் சீரான நிலையில் செல்வதற்கு. இந்த திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமாக உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் மத்திய நிதியமைச்சர் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடைமுறையில் இருக்கும் திட்டங்களில் இந்தத் திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் அளிக்கப்பட்டுள்ளது 7.4  சதவீத அளவிற்கு.

அரசாங்கத்திற்கு நல்ல வருவாயை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதிகளை திரட்டுகிறது  நமது அரசு இதன் மூலம் நாட்டிலுள்ள குடிமக்களை பாதுகாக்க அவர்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் முழு விவரங்கள்.

SCSS Saving Scheme Benefits in Tamil 2020

மூத்த குடிமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர் இதில் இணைந்து நல்ல பலனை பெற முடியும். தபால் அலுவலகம் மற்றும் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்யலாம் மேலும் முதிர்ச்சி அடைந்த பிறகும் இந்த திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க கூடிய வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய, மாநில அரசாங்க ஊழியர் ( வி ஆர் எஸ் ) எடுக்கும் ஒருவர் 55 வயது முதல் 60 வயதிற்குள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம்  15 லட்சம் ரூபாய் வரை இந்த  திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் ரூபாய் 10 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு 7.4 சதவீதம் வட்டி விகிதத்தில் ,428,964  அவருக்கு 4 லட்ச ரூபாய்க்கு மேல் அவருக்கு லாபம் கிடைக்கும். 80c கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வங்கிகள்.

  1. Post office
  2. Andhra bank
  3. Allahabad bank
  4. State bank of India
  5. Bank of India
  6. Bank of Baroda
  7. Canara bank
  8. Central bank of India
  9. Corporation bank
  10. UCO bank
  11. Dena bank
  12. Syndicate bank
  13. Indian bank
  14. IDBI bank
  15. Punjab national bank
  16. Vijay bank
  17. Union bank of India
  18. Indian overseas bank

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்.

ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்,  வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ்,  போன்ற ஆவணங்கள் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு தேவைப்படுகிறது.

Best milk in this world 2020

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள்.

SCSS Saving Scheme Benefits in Tamil 2020

இந்தியாவில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடியாது

இன்றைய இளைஞர்களுக்கான ஏழு சிறந்த முதலீட்டு திட்டங்கள்

இந்து கூட்டுக் குடும்பம் இந்த திட்டத்தில் இணைவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது மற்றும் குடும்பத்தில் ஒருவர் அல்லது தலைவர் இணைந்து கொள்ளலாம்.twitter

Leave a Comment