semmaram valarpu muraigal best tips 2023
செம்மரம் வளர்ப்பு பற்றிய விவரங்கள்
விவசாயத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்கு பல வழிகள் இருக்கிறது, விவசாயம் பற்றிய நன்கு விழிப்புணர்வு இருந்தால், நீங்கள் நிச்சயம் விவசாயத்தில் லாபத்தை மட்டுமே பார்க்க முடியும்.
விவசாயத்தில் நீங்கள் குறிப்பிட்ட செடி, கொடி, தாவர வகைகள், பூக்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், மரம், பறவை, விலங்கு, உள்ளிட்டவற்றை வளர்த்தால் அதிகப்படியான லாபம் இருப்பதற்கான வழிகள் இருக்கிறது.
தேக்கு, சவுக்கு, ஆலமரம், அரசமரம், புளியமரம், அத்திமரம், வேப்பமரம், பனைமரம், தென்னைமரம், போன்ற மரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தால் கூட.
அதற்கான பராமரிப்பு மற்றும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை வளர்க்க அதிக விவசாயிகள் தயங்குகிறார்கள்.
அதிக தண்ணீர் வசதி தேவைப்படாத வறட்சியில் மட்டும் நன்கு வளரக்கூடிய மரத்தை பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
semmaram valarpu muraigal best tips 2023 அப்படிப்பட்ட வறட்சி நிலையில் வளர்ந்து அதிகப்படியான லாபம் தரக்கூடிய செம்மரத்தை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மரத்தை நீங்கள் இப்பொழுது உங்களுடைய நிலத்தில் நட்டு வளர்க்க தொடங்கினால், அது உங்களுடைய எதிர்காலத்திற்கு மட்டுமில்லாமல், உங்களுடைய அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும்.
ஆனால் இந்த மரத்தை வளர்ப்பதற்கு பல சட்ட சிக்கல்கள் இருக்கிறது, அதை பற்றியும் நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த மரத்தை நீங்கள் வளர்க்கத் தொடங்கினால் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மரத்தை பாதுகாப்பதற்கு நீங்கள் பல்வேறு முயற்சிகள் செய்ய வேண்டும்.
semmaram valarpu muraigal best tips 2023 ஏனென்றால் இந்த மரத்தை பற்றிய விவரம் அறிந்த நபர்கள், இந்த மரத்தை திருடி செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
செம் மரங்களை வளர்க்கும் போது உங்கள் பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கல் செம்மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்ய வேண்டும்.
semmaram valarpu muraigal best tips 2023 அதன்பிறகு செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யும்போது மாவட்ட வன அதிகாரியிடம், இந்த மரத்தை விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
செம்மரம் வளர்ப்பு முறை பற்றிய தகவல்கள்
பொதுவாக செம்மரம் செம்புறைக்கல் என்றும் சொல்லும் மண்ணில் வளர்ந்தால் மட்டுமே சிவப்பு நிறத்துடன் கூடிய செம்மரம் கிடைக்கும்.
இந்த மரத்தை செம்மண்,கல் கலந்த மண், செம்மண் கலந்த மண்ணில் வளர்க்கப்படும் போது மட்டுமே நல்ல திடமான உறுதியான கட்டை கிடைக்கும், விவசாயிகள் இந்த மரத்தை நடவு செய்வதற்கு முன் மண் பரிசோதனை கட்டாயம் செய்வது நல்லதாக அமையும்.
இந்த மரக்கன்றுகள் நடுவதற்கு சுமார் 3 அடி குழி எடுக்க வேண்டும் அதில் இயற்கை உரங்கள் இடலாம், குறிப்பாக சாம்பல் தெளிப்பது நன்றாக இருக்கும்.
இந்த மரக்கன்றுக்கு அதிக நீர் தேவை இருக்காது, மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அளவு பார்த்துக் கொண்டால் போதுமானது, இரண்டு மாதம் வரை பராமரிப்பு நிச்சயம் தேவை.
8 அடிக்கு 8 அடி இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்யலாம் சுமார் 800 நாற்றுகள் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும், நாற்றுக்களை நட்டவுடன் நிலத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
semmaram valarpu muraigal best tips 2023 இதனை நிலப்பரப்பு முழுவதும் வளர்க்க விரும்பாதவர்கள் வரப்பு பயிராக வளர்க்கலாம் அல்லது வீட்டின் அருகில் சில செடிகளை நட்டு வளர்க்கலாம்.
இந்த மரத்திற்கு பராமரிப்பு என்ன
இதற்கு பெரிய பராமரிப்பு தேவைப்படாது நாற்று நட்டு ஒரு வருடம் வரை மட்டுமே மண் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும்.
களைகள் இருக்காது பூச்சித்தாக்குதல் இருக்காது 20 வருடம் முதல் 30 வருடம் வரை இந்த மரத்தை வளர்க்கும் போது மட்டுமே இதில் மருத்துவ குணம் உருவாகும்.
அதன் பின் இந்த மரம் ஒன்று 1000 கிலோ எடையில் இருக்கும், ஒரு கிலோ இரு 1000வரை விலை போகும்.
இந்த செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும் என்றால் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை இதனை நீங்கள் பெறலாம்
ஈஷா யோகா மூலமும் இதனை நீங்கள் பெறலாம் ஒரு கன்றின் விலை அதிகபட்சம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.